Load Image
Advertisement

நஷ்டஈடு கேட்ட இபிஎஸ் வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு

கடந்த அதிமுக ஆட்சியில், நெடுஞ்சாலை பணி ஒப்பந்தங்களில் முறைகேடு நடந்ததால், அரசுக்கு 692 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாக அறப்போர் இயக்கம் புகார் கூறியது. அப்போது முதல்வராக இருந்த பழனிசாமிக்கு எதிராக, தலைமை செயலர், நெடுஞ்சாலை துறை, லஞ்ச ஒழிப்பு துறையில் அந்த இயக்கத்தினர் புகார் அளித்தனர். தமக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதுடன், மன உளைச்சலையும் ஏற்படுத்தியாக அறப்போர் இயக்கத்திற்கு எதிராக 1.10 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரித்தார். எந்த அடிப்படையில் ஒப்பந்தம் வழங்குவது என்பது அரசின் கொள்கை முடிவை சார்ந்தது என்று பழனிசாமி வக்கீல் வாதிட்டார். ஒரு நிறுவனத்திற்கு ஆதரவாக ஒப்பந்தம் வழங்கப்பட்டதாக கூறுவது தவறு. அந்த நிறுவனமே ஒப்பந்தத்தில் பங்கேற்கவில்லை. அவப்பெயர் ஏற்படுத்தவும், விளம்பரத்திற்காகவும் இதுபோன்ற குற்றச்சாட்டு கூறப்படுகிறது என்றார். பழனிசாமி மீது தனிப்பட்ட முறையில் குற்றச்சாட்டு கூறவில்லை என்று அறப்போர் இயக்கம் தெரிவித்தது. இரு தரப்பினரும் திங்களுக்குள் எழுத்துபூர்வமாக வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement