Load Image
Advertisement

கொள்முதல் நிலையம் திறக்கவில்லை என புகார்

திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு ஒன்றரை லட்சம் ஏக்கர் பரப்பளவில், விவசாயிகள் குறுவை  சாகுபடி செய்தனர். நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட கோவில் திருமாளம், சக்கர கொத்தங்குடி, மேணாங்குடி உள்ளிட்ட பகுதிகளில் அறுவடை முடிந்துள்ளது. செப்டம்பர் 1ம் தேதியே நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. ஆனால் கோவில் திருமாளம் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால், 15 நாட்களாக நெல் மூட்டைகளை கோவில்களிலும், கொள்முதல் நிலைய வாசலிலும் அடுக்கி வைத்து காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மழை பெய்தால் நெல் மூட்டைகள் நனைந்து வீணாகும் என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே அரசு நடவடிக்கை எடுத்து நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement