Load Image
dinamalar telegram
Advertisement

பர்தா அணிய மறுத்ததால் பிரச்னை கணவரை பிரிந்த இந்து பெண் கொலை

மும்பை டாக்சி டிரைவர் இக்பால் ஷேக், 36, ரூபாலி, 20, என்ற இந்து பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். ரூபாலியை இஸ்லாம் மதத்துக்கு மாற்றி, சாரா என பெயர் சூட்டினார், இக்பால். மதம் மாறினாலும், நீ இந்துவாக வாழலாம் என கூறினார். ஆனால், நாளடைவில் உறவினர்கள் நண்பர்கள் வற்புறுத்தலால் மனைவியை பர்தா அணிய சொன்னார். அவர் சம்மதிக்கவில்லை. பர்தா அணியாமல் வெளியே போகக்கூடாது என இக்பால் தடை போட்டதும் பிரச்னை வெடித்தது. 2 வயது மகனுடன் வீட்டை விட்டு வெளியேறிய சாரா, தாய் வீடு அருகே வாடகை வீடு பிடித்து வாழ்ந்தார். இக்பால் அங்கு வந்து, விவாகரத்துக்கு சம்மதம் என எழுதித் தர கேட்டார். சாரா மறுத்து விட்டார். ஆத்திரம் அடைந்த இக்பால், கத்தியால் குத்தி சாராவின் கழுத்தை அறுத்து விட்டு தப்பினார். அதே இடத்தில் சாரா பிணமானார். அக்கம் பக்கத்தினர் சாட்சியத்தின் பேரில் இக்பாலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement