Load Image
dinamalar telegram
Advertisement

எச்எம் மீது கடுப்பால் வினாத்தாள் லீக் ஆசிரியர்கள் 2 பேர் சஸ்பெண்ட்

ராமநாதபுரம் மாவட்டம் ஏ.மணக்குடி கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. பள்ளியில் காலாண்டு தேர்வு நடந்தது. அறிவியல் பரீட்சைக்கு 2 நாள் முன்பே 6ம் வகுப்பு மாணவர்கள் வினாத்தாளுடன் திரிந்தனர். கண்டுபிடித்த ஆசிரியர்கள் புகார் அளித்தனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து விசாரித்தார். ஆசிரியர்கள் ஜெயக்குமார், குமாரவேல் ஆகிய 2 பேரும் தலைமை ஆசிரியர் மீது உள்ள கருத்து வேறுபாட்டால் வினாத்தாளை லீக் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement