Load Image
dinamalar telegram
Advertisement

இந்து அமைப்புகளின் நிர்வாகிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு திடீர் வாபஸ்

முஸ்லிம் ஜாக்ரன் மஞ்ச் என்பது ஆர்.எஸ்.எஸ் துணை அமைப்பு. அதன் தேசிய துணை தலைவர் பாத்திமா அலி. தமிழரான அவர் நாடு முழுதும் சுற்றி, பா.ஜ அரசின் திட்டங்கள், ஆர்.எஸ்.எஸ் செயல்பாடுகள் குறித்து மக்களிடம் சொல்லி வருகிறார். இதை சகிக்க முடியாத தீவிரவாதிகள் பாத்திமா அலிக்கு மிரட்டல் விடுக்கின்றனர். அவதூறு பிரசாரம் செய்கின்றனர். செங்கல்பட்டு அருகே அவர் கார் மீது ஒரு வாகனம் மோதியது. தொடர்ந்து கொலை மிரட்டல் வந்தது. உளவு துறை பரிந்துரை படி, பாத்திமாவுக்கு , ஆகஸ்ட் மாதம் போலீஸ் பாதுகாப்பு தரப்பட்டது. திடீரென இப்போது போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. அதற்கு காரணம் சொல்லவில்லை. இதே போல தமிழகம் முழுவதும் இந்து அமைப்புகளின் பிரமுகர்கள் பலருக்கும் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டுள்ளது. ”மத தீவிரவாதிகளால் ஆபத்து அதிகரித்துள்ள சூழலில் அரசு இவ்வாறு பாதுகாப்பை ரத்து செய்திருப்பது புதிராக இருக்கிறது” என்கின்றனர். ”போலீஸ் பாதுகாப்பு கொடுத்து திரும்ப பெற்றதன் வாயிலாக, எங்களை அடையாளம் காட்டியது போல ஆகி விட்டது. உயிர் விஷயத்தில் கூட, தமிழக அரசு அரசியல் செய்வது, அநாகரிகமாக தெரிகிறது” என குமுறுகிறார் பாத்திமா அலி.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement