Load Image
Advertisement

பிரியாணி சாப்பிட்டவர் மூச்சு திணறி பலி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த லக்கம்பட்டியை சேர்ந்தவர் அருண்குமார். வயது 24. தேன்கனிக்கோட்டை தேர்பேட்டையில் தங்கி, பர்னிச்சர் கடையில் வேலை செய்து வந்தார். அருண்குமார் நண்பர்களுடன் ரூமில் பிரியாணி வாங்கி சாப்பிட்டார். திடீரென வாந்தி எடுத்த அவர், மூச்சு விட முடியாமல் துடித்தார். நண்பர்கள், அவரை ஆம்புலன்ஸ் மூலம் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அருண்குமாரை சோதித்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக கூறினர். இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement