Load Image
Advertisement

லிப்ட்டில் சிக்கிய அமைச்சர் 2 இன்ஜினியர்கள் சஸ்பெண்ட்

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் செவ்வாயன்று பல்வேறு திட்டங்களை சுகாதார அமைச்சர் சுப்ரமணியன் தொடங்கிவைத்தார். 3வது தளத்தில் இருந்து தரை தளத்திற்கு லிப்டில் சென்றார். டாக்டர்கள், அதிகாரிகள் உடன் சென்றனர். லிப்ட் பழுதாகி இடையில் நின்றது. அவசர கால வழியை திறந்து அமைச்சர் உள்ளிட்டோர் மீட்கப்பட்டனர். 19 ஆண்டுகளாக, லிப்ட் பராமரிப்பின்றி இருந்தது விசாரணையில் தெரியவந்தது. உதவி செயற்பொறியாளர் சுசீந்திரன், உதவி பொறியாளர் கலைவாணி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments (9)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)
Mani . V
Mani . V - Singapore,சிங்கப்பூர் . 01-டிச-2022 16:48 IST

தமிழ்நாடே இந்த ஊழல்வாதிகளிடம் சிக்கி தவிக்கிறதே,

Reply
raja
raja - Cotonou,பெனின் . 01-டிச-2022 13:48 IST

மின்சார மங்குனி அமைச்சன் அணிலுக்குள்ள தண்டனை கொடுகணும்...

Reply
அருணா
அருணா - . 01-டிச-2022 11:51 IST

அமைச்சர் சிக்கினால் தான் Lift சரியாகும் போல மக்கள்?

Reply
kuppuswany India
kuppuswany India - . 01-டிச-2022 09:54 IST

அந்த லிப்ட் விடியல் ஆட்சியில் கட்டியதாக இருக்கும்......

Reply
Natarajan Ramanathan
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா . 01-டிச-2022 09:12 IST

லிப்டில் சிக்கிய ... தண்டனை எதுவும் கிடையாதா?

Reply
Gokul Krishnan
Gokul Krishnan - Thiruvanthapuram,இந்தியா . 01-டிச-2022 09:00 IST

இவங்க லிஃப்ட்ல மாட்டினா மட்டும் நடவடிக்கை இதுவே சிகிச்சைக்கு வருபவர்கள் மருத்துவர் செவிலியர் மாட்டி இருந்தால் இது ஒரு செய்தியே கிடையாது

Reply
சி ரதி
சி ரதி - . 01-டிச-2022 08:53 IST

எங்கோ ஒரு லிப்ட் ப்ரச்சினை ஆனால் இன்ஜினியரிங் சஸ்பெண்ட் ,இது எல்லாம் ஒவராக தெரியவில்லை.ப்ரியா இறந்த போது மருத்துவருக்கு சொம்பு துக்கியவர்,தனக்கு என்றவுடன் உடனே நடவடிக்கை.

Reply
மாயவரம் சேகர்
மாயவரம் சேகர் - . 01-டிச-2022 08:50 IST

என்ன ஒரு துரித நடவடிக்கை... தங்களுக்கு வந்தால் ரத்தம் ,மத்தவங்களுக்கு வந்தால் தக்காளி சட்னி... பிரதமர் பாதுகாப்பில் இயந்திரங்கள் சரியாக வேலை செய்யாததாக வந்துள்ள குற்றச்சாட்டிற்கு என்ன நடவடிக்கை?

Reply
அப்புசாமி
அப்புசாமி - . 01-டிச-2022 08:37 IST

மின் துறை அமைச்சரை சஸெண்ட் பண்ணியிருக்கணும். இவருக்கெல்லாம் சஸ்பெண்ட் செய்த நாலு இளிச்ச வாயனுங்க கிடைச்சுக்கிட்டே இருப்பாங்க. அது சரி, சஸ்பெண்ட் ஆன ரெண்டு பேர் எப்பிடி வேலைக்கு சேந்தாங்க? சமூக நீதியா? இல்லே லஞ்சம் குடுத்து வந்தவங்களா? லிஃப்ட் பொருத்திய பிறகு ஒரு தடவையாவது மெயிண்டனன்ஸ் செஞ்சிருப்பீங்களா?

Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement