Load Image
Advertisement

14 டன் ரேஷன் அரிசி பறிமுதல் தாசில்தாரை மிரட்டிய முகமூடி கும்பல்

திருப்பத்தூரில் இருந்து பெங்களூருக்கு ரேஷன் அரிசி கடத்துவதாக கிருஷ்ணகிரி தாசில்தார் இளங்கோவுக்கு தகவல் வந்தது. அரிசி கடத்தி சென்ற கன்டெய்னர் லாரியை ஆவின் மேம்பாலம் அருகே மடக்கி பிடித்தார். அதில் 14டன் ரேஷன் அரிசி இருந்தது. லாரியை பறிமுதல் செய்தார். போலீசுக்கு தகவல் தந்தார். போலீஸ் வருவதற்குள் முகமூடி அணிந்த மர்ம கும்பல் வந்தது. லாரியை விட சொல்லி மிரட்டினர். தாசில்தார் மற்றும் அவரது உதவியாளர் மறுத்ததால், அந்த கும்பல் ஆபாச வார்த்தைகளால் திட்டியும், கொலை மிரட்டல் விடுத்தும் அங்கிருந்து தப்பி சென்றது. லாரி டிரைவர் தமிழரசனை போலீசார் விசாரித்தனர். திருப்பத்தூரை சேர்ந்த சேகர் அரிசி கடத்தலில் ஈடுபட்டதும், அந்த கும்பல் சேகரின் அடி ஆட்கள் என்பதும் தெரிந்தது. தமிழரசனை கைது செய்த போலீசார் சேகரையும் அவனது கும்பலையும் தேடி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement