Load Image
Advertisement

நினைத்தது ஒன்று... நடந்தது ஒன்று

உலக கோப்பை கால்பந்து போட்டிகளை பார்க்க, கத்தாருக்கு ரசிகர்கள் படை எடுக்கின்றனர். துடிப்பான கால்பந்து 'உதைகளுக்கு' இடையில், ரசிகர்கள் கத்தாரை சுற்றி பார்த்து வருகின்றனர். பாலைவனத்தில் காரில் பயணிப்பது, ஒட்டகத்தில் ஒய்யாரமாக சவாரி செய்கின்றனர். குதுாகலம் மட்டும் இல்லாமல், கலாச்சாரத்தை அறிந்து கொள்ள அருட்காட்சியகமும் உள்ளது. சொகுசு ஓட்டலுக்கும் பஞ்சம் இல்லை. இப்படி பல விஷயத்தால் கத்தார் ரசிகர்களை கட்டி இழுக்கிறது. பொது இடங்களில் மதுவுக்கு தடை என்பதால், பெண் ரசிகைகள் உற்சாகமாக உலா வருகின்றனர். இப்படி ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் இருந்தாலும், உலக கால்பந்து கூட்டமைப்பு ஏமாற்றத்தை சந்தித்துள்ளது. முதல் இரண்டு வாரங்களில், போட்டியை 12 லட்சம் ரசிகர்கள் பார்க்க வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று என்ற கதையாக மாறிவிட்டது. இதுவரை 7.65 லட்சம் ரசிகர்கள் மட்டுமே பார்த்துள்ளனர். இதில் சுமார் 4 லட்சம் ரசிகர்கள் தற்போது கத்தாரிலிருந்து கிளம்பி விட்டனர். இன்னும் 8 அணிகள் மட்டுமே களத்தில் உள்ள நிலையில், ரசிகர்களின் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரிக்க வாய்ப்பு இல்லை.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement