Load Image
Advertisement

ஆன்லைனில் பிளாஸ்டிக் தொப்பை வாங்கி கர்ப்பிணியாக நடித்தது அம்பலம் | Andhra | Crime

ஆந்திராவின் கடப்பா மாவட்டம் சின்ன தெபாலி கிராமத்தை சேர்ந்த மெகபூப் ஜான் என்பவருக்கு, அரசு மருத்துவமனையில் ஆண்குழந்தை பிறந்தது. லேபர் வார்டில் இருந்த அவரிடம், கர்ப்பிணி ஒருவர் பேச்சு கொடுத்தார். 7 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் சிகிச்சைக்கு வந்ததாகவும் கூறியுள்ளார். மெகபூப்பின் குழந்தையை கொஞ்சிய கர்ப்பிணி, தமது கணவரிடம் குழந்தையை காண்பித்து வருவதாக கூறிவிட்டு, தூக்கி சென்றார். கர்ப்பிணிதானே என்று மெகபூப் ஜானும் சாதாரணமாக இருந்துவிட்டார். நீண்ட நேரம் ஆகியும் அந்த கர்ப்பிணி வரவில்லை. சந்தேகமடைந்த மெகபூப் நர்சுகளிடம் கூறினார். மருத்துவமனை பாதுகாப்பு அதிகாரிகள் அந்த கர்ப்பிணியை தேடினர். கடப்பா நகரின் ஐடிஐ சந்திப்பில் அவரை கண்டுபிடித்து, குழந்தையை மீட்டனர். கர்ப்பிணியையும் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். போலீசார் விசாரித்தபோது, அவர் கர்ப்பிணிபோல் நடித்தது அம்பலமானது. அக்காயபள்ளியை சேர்ந்த 28 வயதான சோனி என்பது தெரிந்தது. திருமணமாகி ஐந்தாண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. உறவினர்கள் பரிகாசம் செய்வதால் குழந்தையை திருடி சென்று வளர்க்க முடிவெடுத்தார். ஆன்லைன் ஷாப்பிங்கில் 16 ஆயிரம் ரூபாய்க்கு ரப்பர் தொப்பையை வாங்கி கட்டிக்கொண்டு, கர்ப்பமானதாக குடும்பத்தினரை ஏமாற்றி வந்தார். பிரசவத்தில் குழந்தை பிறந்தது போல், காட்டிக்கொள்ள குழந்தையை திருடி செல்லும்போது சிக்கி கொண்டார். குழந்தை மீட்கப்பட்டு தாயிடம் ஒப்படைக்கப்பட்டது. சோனியை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement