Load Image
Advertisement

பெண் பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரம்: விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் அதிரடி உத்தரவு

நியூயார்க்கில் இருந்து நவம்பர் 26ம்தேதி டில்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில், 72 வயது பெண் பயணித்தார். அவர் மீது சங்கர் மிஸ்ரா என்பவர் மதுபோதையில் சிறுநீர் கழித்தார். இதுகுறித்து பெண் புகார் அளித்தும் விமான ஊழியர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. டில்லிக்கு வந்த பின் அந்த பெண் ஏர் இந்தியா தலைமை அலுவலகத்துக்கு ஆன்லைனில் புகார் அனுப்பினார். இந்த விவகாரம் சில தினங்களுக்கு முன் வெளிச்சத்துக்கு வந்தது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்த விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சங்கர் மிஸ்ரா மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள அவரை லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பி போலீசார் தேடி வருகின்றனர். விவகாரம் பூதாகரமானதால் வால்ஸ் பெர்கோ நிதி நிறுவனத்தின் துணை தலைவர் பதவியில் இருந்து சங்கர் மிஸ்ராவை அந்நிறுவனம் டிஸ்மிஸ் செய்துள்ளது. தற்போது விமானத்தில் கட்டுக்கடங்காமல் நடக்கும் பயணிகளுக்கு கைவிலங்கு மாட்ட ஒழுங்குமுறை ஆணையும் உத்தரவிட்டுள்ளது. இதற்காக கைவிலங்கு, பெல்ட் உள்ளிட்டவற்றை விமானத்துக்குள் வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒழுங்கீனமாக நடக்கும் பயணிகளை கட்டுப்படுத்த தவறும் விமான ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஒழுங்குமுறை ஆணையம் எச்சரித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement