Load Image
Advertisement

மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு கவர்னர் ரவி அனுப்பிய 3 ரகசியம்

தமிழக கவர்னர் ரவியை எதிர்த்து தினமும் தி.மு.க.,வைச் சேர்ந்தவர்கள் அறிக்கை வெளியிடுகின்றனர். கடுமையாக விமர்சிக்கிறார்கள். கவர்னரோ எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. தமிழக அரசியலை கூர்ந்து கவனிக்கிறார். மாநிலத்துக்கு பாதகமான விஷயங்களை மத்திய அரசுக்கு சொல்லி வருகிறார். இப்போது 3 பக்க ரகசிய அறிக்கையை உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு அனுப்பியுள்ளார். 'தேசிய புலனாய்வு அமைப்பு தமிழகத்தில் செயல்பட வேண்டிய முறை, கண்காணிக்கப்பட வேண்டிய என்.ஜி.ஓ.,க்கள் பற்றி விவரமாக தெரிவித்துள்ளாராம். தென் மாவட்டங்களில் நடக்கும் தீவிர மதமாற்றம், இதன் பின்னணியில் இருப்பவர்கள் பற்றியும் விளக்கியுள்ளாராம். இவற்றின் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்கின்றனர் உள்துறை அதிகாரிகள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement