Load Image
Advertisement

டில்லியில் இருந்து சுருட்டிய "துணிவு" கொள்ளையர்களை தூக்கியது சென்னை போலீஸ்

சென்னை பாரிமுனையில் உள்ள தமிழ்நாடு தலைமை கூட்டுறவு வங்கியில் நவம்பர் மாதம் 2.61 கோடி ரூபாய் கொள்ளை போனது. சர்வரை ஹேக் செய்து ஆன்லைன் மூலம் பணம் திருடப்பட்டது. இந்த கொள்ளையில் தொடர்புடைய நைஜீரியர்கள் 2 பேரை டில்லி சென்று தூக்கி வந்தது சென்னை போலீஸ். கைதானவர்கள் பெயர் அகஸ்டின், காட்வின். இந்த கொள்ளை குறித்து போலீஸ் கூறியதாவது: கம்ப்யூட்டரை ஹேக் செய்யும் "கீ லாக்கர்" எனும் மென்பொருளை கொள்ளையர்கள் இமெயில் மூலம் ஆகஸ்ட் மாதம் வங்கிக்கு அனுப்பினர். மெயிலை ஓபன் செய்த ஊழியர் தெரியாமல் லிங்கை கிளிக் செய்துவிட்டார். உடனே கணினியில் பதிவிறக்கம் ஆனது மென்பொருள். அந்த மென்பொருள் மூலம் டில்லியில் இருந்தபடி வங்கி பரிவர்த்தனைகளை நோட்டம் பார்த்த கொள்ளையர்கள், நவம்பர் 18ம் தேதி லீவு நாளில் வேலையை காட்டினர். வங்கியில் இருந்து அடுத்தடுத்து 32 வங்கி கணக்குகளுக்கு 2.61 கோடி ரூபாயை டிரான்ஸ்ஃபர் செய்தனர். உடனே வங்கி உயர் அதிகாரிகளுக்கு மெசேஜ் போனது. உஷார் ஆனார்கள். சைபர் கிரைம் போலீஸ் மூலம் மேற்கொண்டு பணத்தை எடுக்க முடியாதபடி தடுத்தனர். பணம் டிரான்ஸ்பர் ஆன 32 வங்கி கணக்குகளும் டில்லி, நாகாலாந்து, ராஜஸ்தானை சேர்ந்தவர்களுக்கு சொந்தமானது. அவர்களிடம் குறிப்பிட்ட தொகையை கொடுத்து வங்கி கணக்குகளை கொள்ளையர்கள் தங்கள்வசமாக்கியதை கண்டுபிடித்தோம். டிரான்ஸ்பர் செய்த பணத்தை டில்லியில் உள்ள பல ஏடிஎம்கள் மூலம் எடுத்துள்ளனர். பணம் எடுத்த நேரம், அங்கிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து கொள்ளையர்கள் நைஜீரியர்கள் என்பதை அடையாளம் கண்டோம். டில்லியில் நைஜீரியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிக்கு சென்று தேடினோம். அங்கு பதுங்கி இருந்த கொள்ளையர்கள் அகஸ்டின், காட்வினை கைது செய்தோம். 1.10 கோடி ரூபாயை மீட்டு விட்டோ
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement