Load Image
Advertisement

உலக ஹாக்கி திருவிழா ஆரம்பம்

உலக கோப்பை ஹாக்கி தொடரில் 48 ஆண்டுக்குப் பின் இந்தியா சாதிக்குமா என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் 15வது உலக கோப்பை ஹாக்கி தொடர் ஜனவரி 13ல் துவங்குகிறது. ஒடிசா மாநிலத்தின் புவனேஸ்வர், ரூர்கேலாவில் போட்டிகள் நடக்கவுள்ளது. ஜனவரி 29ம் தேதி வரை துடிப்பான ஆட்டம், அபாரமான கோல், ரசிகர்களின் ஆரவாரம் என ஹாக்கி திருவிழா களைகட்டும். மொத்தம் 16 அணிகள் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு களமிறங்குகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெறும் அணி நேரடியாக காலிறுதிக்கு முன்னேறும். இரண்டாவது, மூன்றாவது இடம் பிடிக்கும் அணிகள் 'கிராஸ் ஓவர்' முறையில் போட்டிகளில் பங்கேற்று, பிறகு காலிறுதிக்குள் நுழையும். 1971 முதல் உலக கோப்பை அரங்கில் நடந்த 14 தொடரிலும் பங்கேற்ற அணிகள் வரிசையில் இந்தியா, ஸ்பெயின், நெதர்லாந்து அணிகள் இடம் பெற்றன. இந்த மூன்று அணிகளும் தொடர்ந்து 15வது உலக தொடரில் களமிறங்க உள்ளன. உலக கோப்பை ஹாக்கி தொடரில் இதுவரை 605 போட்டிகள் நடந்தன. 2433 கோல் அடிக்கப்பட்டன. சராசரியாக ஒரு போட்டிக்கு 4 கோல் அடிக்கப்பட்டுள்ளன. இத்தொடரில் ஆஸ்திரேலிய அணி 305 கோல் அடித்து 'நம்பர்-1' ஆக திகழ்கிறது. பாகிஸ்தான் அணி அதிகபட்சம் நான்கு முறை கோப்பை வென்றது. ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, அணிகள் தலா 3 முறை சாதித்தன. ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி 'டி' பிரிவில், இங்கிலாந்து, ஸ்பெயின், வேல்ஸ் அணிகளும் இடம் பெற்றுள்ளது. இந்திய அணி ஜனவரி 13ல் நடக்கவுள்ள தனது முதல் போட்டியில் ஸ்பெயினை எதிர்கொள்கிறது. அடுத்து இங்கிலாந்து, வேல்ஸ் அணிகளுடன் மோதவுள்ளது. இந்திய அணியை பொறுத்தவரை கடைசியாக 1975ல் நடந்த தொடரில் கோப்பை கைப்பற்றியது. இதன்பின், 48 ஆண்டுகளாக பட்டம் வெல்ல போராடுகிறது. இம்முறை அனுபவ கோல்கீப்பர் ஸ்ரீஜேஸ், மன்தீப் சிங், ஆகாஷ்தீப் சிங் உள்ளிட்டோர் கைகொடுக்கும் பட்சத்தில் இந்தியா மீண்டும் கோப்பை வசப்படுத்தும் என நம்புவோம்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement