Load Image
Advertisement

அபர்ணாவிடம் அத்துமீறிய மாணவன் சஸ்பெண்ட் | Actress Aparna | Viral Video

நடிகை அபர்ணா நடித்த தன்கம் என்ற மலையாளப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி எர்ணாகுளத்தில் உள்ள சட்டக்கல்லூரியில் நடந்தது. மேடையில் அமர்ந்திருந்த அபர்ணாவிடம் கல்லூரி மாணவன் ஒருவன் பூ கொடுத்தான். அப்படியே அபர்ணா மேலே கைபோட்டு போட்டோ எடுக்க முயன்றான். மாணவனின் அந்த செயலால் அதிர்ச்சியடைந்த அபர்ணா, நழுவி சென்றார். மாணவன் பிறகு தனது செயலுக்காக மன்னிப்பு கேட்டான். அப்போது கூட, கல்லூரி நிர்வாகிகள் மாணவனை கண்டிக்கவில்லை. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. அபர்ணாவுக்கு ஆதரவாகவும், கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்தும் ரசிகர்கள் கருத்து பதிவிட்டனர். இது பெரும் சர்ச்சையாக மாறியதால் அந்த மாணவனை ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்து, சட்டக்கல்லூரி நடவடிக்கை எடுத்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement