Load Image
Advertisement

மதுரையில் 'தினமலர்' நடத்தும் நீங்களும் ஆகலாம் IAS நிகழ்ச்சி துவங்கியது

மதுரையில் 'தினமலர்' நாளிதழ் மற்றும் கிங் மேக்கர்ஸ் IAS அகாடமி இணைந்து நடத்தும் 'நீங்களும் ஆகலாம் IAS' வழிகாட்டி நிகழ்ச்சி மாவட்ட கோர்ட் அருகே உள்ள ராஜா முத்தையா மன்றத்தில் கோலாகலமாக துவங்கியது. இந்நிகழ்ச்சியை சென்னை வருமான வரி கூடுதல் கமிஷனர் வி. நந்தகுமார் IRS, கிங் மேக்கர்ஸ் IAS அகாடமி இயக்குனர் எம். பூமிநாதன், 'தினமலர்' மதுரை பதிப்பு வெளியீட்டாளர் டாக்டர். எல். ராமசுப்பு, 'தினமலர்' கோவை பதிப்பு வெளியீட்டாளர் எல். ஆதிமூலம், 'தினமலர்' இணை இயக்குனர் ஆர். லெட்சுமிபதி குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக முன்னாள் IPS அதிகாரி அண்ணாமலை பங்கேற்று மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பதோடு 'IAS கனவை எவ்வாறு நனவாக்க முடியும்' என்பது குறித்து பேசுகிறார். IAS கனவோடு வந்துள்ள மாணவ, மாணவிகள் தேர்வில் வெற்றி பெறுவது குறித்து கிங் மேக்கர்ஸ் IAS அகாடமி இயக்குனர் எம். பூமிநாதன் பேசினார். IAS தேர்வு எழுதி சாதிக்கத் துடிப்போருக்கு சென்னை வருமான வரி கூடுதல் கமிஷனர் வி. நந்தகுமார் IRS பயனுள்ள தகவல்களுடன் பேசவுள்ளார். நிகழ்ச்சி நடக்கும் ராஜா முத்தையா மன்றத்தில் ஸ்காலர்ஷிப் தேர்வு நடைபெற்றது. இதில் பிளஸ் 1 பிளஸ் 2 மாணவ, மாணவிகள் ஏராளமானோர் ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் பங்கேற்றனர். வெற்றி பெறும் முதல் மூன்று பேருக்கு கிங்மேக்கர் அகாடமியில் இலவச பயிற்சி அளிக்கப்படும். இந்நிகழ்ச்சி மதியம் 1 மணிக்கு நிறைவடைகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement