Load Image
Advertisement

பஸ்சில் இருந்து இறக்கி விடப்பட்ட பெண் பின்சக்கரத்தில் சிக்கி பலி

திருப்பூர் தெக்கலூரை சேர்ந்தவர் செல்வி. திருப்பூரிலிருந்து தெக்கலூர் செல்வதற்காக, ஒரு தனியார் பஸ்சில் ஏறினார். அந்த பஸ் தெக்கலூர் போகாது எனக்கூறி செல்வியை கண்டக்டர் தேவராஜ் பாதிவழியில் இறக்கிவிட்டார். செல்வி இறங்குதற்குள் பஸ்சை டிரைவர் எடுத்துவிட்டார். இதில், தவறி விழுந்த செல்வி பின் பக்க சக்கரத்தில் சிக்கி இறந்தார். இதைக் கண்ட 500க்கு மேற்பட்ட பொதுமக்கள், செல்வியின் மரணத்துக்கு காரணமான பஸ் ஊழியர்களை கைது செய்யக்கோரி அவினாசி பஸ் ஸ்டாண்ட் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டிரைவர் சுரேந்தர், கண்டக்டர் தேவராஜை போலீசார் கைது செய்தனர். செல்வியின் குழந்தைகளின் படிப்பு செலவை அரசே ஏற்க வேண்டுமெனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர் ( ப்ரத் ) தெக்கலூரில் வியாபாரிகள் கடைகளை அடைத்தனர். 50 வருடமாக தெக்கலூரில் பஸ் நிற்பதில்லை; அந்த நிலையை அரசு மாற்ற வேண்டும் என செல்வியின் மகள் அகல்யா கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement