Load Image
Advertisement

தானியங்கி மெட்ரோ ரயில் திட்டம் 1620 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம்

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. வழித்தடம் 3, 4, 5ல், ஓட்டுநர் இல்லாத தானியங்கி மெட்ரோ ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு தேவையான அதிநவீன சிக்னல், ரயில் இயக்க கட்டுப்பாடு கருவிகள் மற்றும் காணொலி மேலாண்மை கட்டமைப்பு அமைக்க 1620 கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஹிட்டாச்சி ரயில் STS SPA, ஹிட்டாச்சி ரயில் STS இந்தியா ஆகிய கூட்டு நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 118 கிலோ மீட்டர் பாதை கொண்டது. 2 பணிமனைகள், 113 ரயில் நிலையங்கள், 138 ரயில்கள் மற்றும் 3 பராமரிப்பு ரயில்களுக்கு தானியங்கி கட்டுப்பாடு கட்டமைப்புகள் அமைக்கப்படும். இப்பணிகள் 2027க்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக மெட்ரோ ரயில் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி தெரிவித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement