Load Image
Advertisement

அப்பா, அம்மாவை எரித்துக் கொன்று நாடகமாடிய மகன்.. கஞ்சா போதையில் வெறிச்செயல்

புதுச்சேரி அடுத்த திருக்காஞ்சியை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி வயது 67. மனைவி லதா 55. இவர்களது மகன் புகழ் வயது 26 டிரைவராக வேலை செய்து வந்தார். செவ்வாய்க்கிழமை தட்சிணாமூர்த்தி வீட்டில் இருந்து புகை வந்தது. பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் எட்டி பார்த்தனர். தட்சிணாமூர்த்தி, லதா தீயில் எரிவதை பார்த்து அதிர்ந்தனர். ஓடிவந்து தீயை அணைத்தனர். அதற்குள் தம்பதி இறந்துவிட்டனர். தற்கொலையாக இருக்கலாம் என போலீசார் கருதினர். ஆனால், சம்பவம் நடந்தபோது, உறவினர் வீட்டில் புகழ் இருந்தது தெரியவந்தது. சந்தேகத்தில் அவரை பிடித்து விசாரித்தனர். தற்கொலை செய்திருக்கலாம் என அசால்டாக கூறினார். உரிய முறையில் போலீசார் விசாரித்தபோது பெற்றோரை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். புகழ் கஞ்சா போதைக்கு அடிமையானவர். பெற்றோரிடம் பணம் கேட்டு அடிக்கடி தகராறு செய்துள்ளார். சம்பவத்தன்று கண் செக்கப் செய்ய வேண்டும் என சொல்லி பணம் கேட்டார். எப்படியும் கஞ்சாதான் வாங்குவான் என நினைத்த பெற்றோர் கொடுக்கவில்லை. 2 பேர் முகத்திலும் தலையணையை வைத்து அமுக்கி கொன்றார். தீக்குளித்ததை போல செட்டப் செய்ய சமையல் எண்ணெயை ஊற்றி சடலங்களுக்கு தீவைத்து விட்டு உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார் என தெரிய வந்தது. புகழை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement