Load Image
Advertisement

காசி தமிழ் சங்கமத்தில் யோகாவில் சிவதாண்டவம் ஆடியதற்கு பாராட்டு

மயிலாடுதுறை, வேட்டங்குடியை சேர்ந்த மணிவண்ணன் - சீதா தம்பதியின் மகள் சுபானு. கப்பட்டினம் கல்லூரியில் நேச்சுரோபதி யோகா முதலாம் ஆண்டு படிக்கிறார். சிறு வயதில் இருந்தே சுபானுவுக்கு யோகாசனம் மீது ஆர்வம் அதிகம். கடந்தாண்டு காசியில் நடந்த, காசி-தமிழ் சங்கமத்தில் யோகாசனத்தில் சிவதாண்டவம் ஆடி அனைவரது கவனத்தை ஈர்த்தார். இதை பாராட்டி சுபானுக்கு, பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து அனுப்பி உள்ளார். 'காசி தமிழ் சங்கமத்தில் தாங்கள் பங்கேற்றது நமது சமூக கலாச்சார ஒற்றுமையின் அடையாளம். இந்த நிகழ்ச்சியின் மீதான உங்களின் அன்பு, தேசத்தின் ஒற்றுமையை வலுப்படுத்த என்னுள் புதிய ஆற்றலையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது' என்று மோடி தெரிவித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement