Load Image
Advertisement

பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு | Senthil Balaji | Income Tax Raid

கரூர் ராமகிருஷ்ணாபுரத்தில் திமுக பிரமுகர் அசோக் என்பவரது வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு நடந்தது. அங்கு குவிந்த தி.மு.கவினர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்கள் வந்த வாகனங்களை சேதப்படுத்தினர். தட்டிக்கேட்ட அதிகாரிகளை கூட்டமாக சூழ்ந்து தாக்கினர். கரூர் எஸ்பி ஆபீஸில் திமுகவினர் மீது புகார் கொடுக்கப்பட்டது. அதிகாரிகளை மிரட்டிய திமுக மாநகராட்சி கவுன்சிலர்கள் உட்பட 15 பேர் கைதாகினார். செவ்வாயன்று மேலும் 4 திமுக நிர்வாகிகள் கைதாகினர். இதனால் கைதானவர்கள் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்தது. இவர்கள் மீது அரசு அதிகாரிகளை தடுத்தல், பொது சொத்துகளுக்கு சேதம் உண்டாக்குதல், மிரட்டல் விடுத்தல் பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது. பெண் அதிகாரி காயத்ரியை தாக்கியவர்கள் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குற்றம் செய்தது உறுதியானால் 4 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement