Advertisement

சூரரைப்போற்று

Share

சூரரைப் போற்று - விமர்சனம்

நடிப்பு - சூர்யா, அபர்ணா பாலமுரளி, பரேஷ் ராவல், ஊர்வசி
தயாரிப்பு - 2டி என்டர்டெயின்மென்ட், சிக்யா என்டர்டெயின்மென்ட்
இயக்கம் - சுதா கோங்கரா
இசை - ஜி.வி.பிரகாஷ்குமார்
வெளியான தேதி - 12 நவம்பர் 2020
நேரம் - 2 மணி நேரம் 29 நிமிடம்
ரேட்டிங் - 3.5/5

ஓடிடி தளங்களில் இதுவரையில் வெளியான நேரடி புதுப் படங்கள் ரசிகர்களை திருப்திப்படுத்தவேயில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது. அந்தக் குறையை இந்தப் படம் போக்கியிருக்கிறது.

தமிழ் சினிமாவில் 'பயோபிக்' படங்கள் வருவது மிகவும் அரிது. அந்தக் குறையையும் இந்தப் படம் நிவர்த்தி செய்திருக்கிறது. இந்திய பயணிகள் விமான சேவையில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்த ஜி.ஆர்.கோபிநாத் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம் இது. அதை உணர்வுபூர்வமாகவும், நல்லதொரு தயாரிப்புத் தரத்துடனும் கொடுத்திருக்கிறார் இயக்குனர் சுதா கோங்கரா.

வாழ்க்கை வரலாற்றுக் கதைகளை திரைப்படமாக மாற்றும் போது அதை ரசிகர்களும் ரசிக்கும் விதத்தில் கொடுக்க வேண்டும் என்பது பெரும் சவாலாக இருக்கும். அதை விறுவிறுப்பான திரைக்கதை மூலம் இரண்டரை மணி நேரம் போவது தெரியாமல் தந்திருக்கிறார் சுதா.

இந்திய விமானப் படையிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று வந்தவர் சூர்யா. சாதாரண ஏழை மக்களும் விமானத்தில் பயணிக்க, குறைந்த விலை பயணிகள் விமான சேவையைத் தர வேண்டும் என நினைக்கிறார். அதற்காக ஒரு விமான நிறுவனத்தை ஆரம்பிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கிறார். தன்னைப் போலவே சுய முயற்சியில் சாதிக்க வேண்டும் என்று நினைக்கும் அபர்ணா பாலமுரளியைத் திருமணம் செய்து கொள்கிறார். விமான நிறுவனம் ஆரம்பிக்கும் முயற்சியில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறுகிறார் சூர்யா. ஆனால், அவரது முயற்சியை முன்னணி தனியார் விமான சேவை நிறுவன அதிபரான பரேஷ் ராவல் தன் பண பலத்தாலும், அதிகார பலத்தாலும் தடுக்கிறார். அதையும் மீறி தன் முயற்சியில் சூர்யா வெற்றி பெற்றாரா இல்லையா என்பதுதான் 'சூரரைப் போற்று'.

படத்தின் கதைக்குப் பொருத்தமான தலைப்பு, பொருத்தமான நடிகர்கள், இயல்பான கதைக்களம் என ஆரம்பத்திலேயே ஒரு படத்தைப் பார்க்கிறோம் என்ற உணர்வு ஏற்படாமல் நெடுமாறன் ராஜாங்கம் என்ற துடிப்பான இளைஞனின் வாழ்க்கைப் போராட்டத்தைப் பார்க்கிறோம் என்ற உணர்வே ஏற்படுகிறது.

நெடுமாறன் ராஜாங்கம் கதாபாத்திரத்தில் சூர்யாவின் நடிப்பு வேறொரு தளத்தில் பரிணமளிக்கிறது. இந்த அளவிற்கு உணர்ச்சி பொங்க நடித்திருக்கும் சூர்யாவின் கதாபாத்திரத்தில் வேறு யாரையும் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு மாறன் கதாபாத்திரத்தில் தன்னை அப்படியே புகுத்திக் கொண்டுள்ளார். தன்னால் செய்து முடிக்க முடியும் என்ற கர்வம், எதையும் எதிர்த்து நிற்கும் துணிச்சல், எந்த சந்தர்ப்பத்திலும் பின்வாங்காத விடாமுயற்சி என அவரது கண்கள் முதல் கால்கள் வரை மாறன் கதாபாத்திரம் நடித்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். சூர்யாவின் திரையுலகப் பயணத்ததில் இந்த 'சூரரைப் போற்று' இன்னும் பல வருடத்திற்குப் போற்றக் கூடிய ஒரு படமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

அபர்ணா பாலமுரளியை படத்தின் நாயகி என்று சொல்வதை விட கதையின் நாயகி என்றுதான் சொல்ல வேண்டும். வாழ்க்கையில் சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொரு இளைஞனுக்கும் அபர்ணா கதாபாத்திரம் போன்ற மனைவி கிடைத்தால் எந்த ஒரு சூழ்நிலையிலும் சிறிதும் பின்னடைவை சந்திக்க மாட்டார்கள். மதுரைத் தமிழ் பேசிக் கொண்டு தன் கதாபாத்திரத்தை மற்றவர்களும் பேச வைத்திருக்கிறார். சூர்யாவின் நடிப்புக்கு ஈடு கொடுத்து நடித்திருக்கிறார்.

படத்தின் வில்லன் என்று சொல்வதைவிட எவனையும் வளரவிடக் கூடாதென நினைக்கும் கார்ப்பரேட் முதலாளி கதாபாத்திரத்தில் பரேஷ் ராவல். பணபலமும், அதிகார பலமும் உள்ள ஒருவர் நினைத்தால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதற்கு இந்தக் கதாபாத்திரம் பெரும் உதாரணம். விமானப்படையில் சூர்யாவின் மேலதிகாரியாக மோகன் பாபு. இவருடைய கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் இல்லை என்றாலும் முக்கியமான சந்தர்ப்பத்தில் கை கொடுக்கும் ஒரு கதாபாத்திரமாக அமைந்துள்ளது.

சூர்யாவின் ஊர் நண்பராக காளி வெங்கட், சக விமானப்படை நண்பர்களாக விவேக் பிரசன்னா, கிருஷ்ணகுமார், சூர்யாவின் அம்மாவாக ஊர்வசி, அபர்ணவின் சித்தப்பாவாக கருணாஸ் என மற்ற கதாபாத்திரங்களுக்கும் படத்தில் முக்கியத்துவம் உண்டு. அவரவர் கதாபாத்திரத்தில் தங்களின் நடிப்பு இயல்பாக பதிவு செய்துள்ளார்கள்.

ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் பொருத்தமான இடங்களில் பொருத்தமான பாடல்கள். பின்னணி இசையில் படத்திற்கு உண்டான கூடுதல் நெகிழ்ச்சியை தன் இசை மூலம் பதிவு செய்திருக்கிறார். நிகேத் பொம்மிரெட்டியின் ஒளிப்பதிவும், சதீஷ் சூர்யாவின் படத் தொகுப்பும் படத்தின் தரத்திற்கு முக்கியமான காரணங்கள்.

படம் ஆரம்பமான காட்சியிலிருந்து கடைசி கிளைமாக்ஸ் வரை சீரியஸ் ஆக மட்டுமே நகர்கிறது. ஆரம்பத்தில் மட்டும் சூர்யா-அபர்ணாவின் ஓரிரு காதல் காட்சிகள் மட்டுமே கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக உள்ளது. சினிமாவுக்குரிய பெரிய திருப்பங்கள் என்று எதுவும் கிடையாது. பரேஷ் ராவலுடன் மட்டுமே சூர்யா போட்டி போடுவதாக காட்சிகள் உள்ளன. மற்ற தடங்கல்களையும் கொஞ்சம் காட்டியிருக்கலாம். அரசியல் இடர்ப்பாடுகள் என எதுவும் படத்தில் இல்லை.

சூரரைப் போற்று - விருது கொடுத்து போற்றலாம்...!

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (47)

 • Savithri Kannan - COIMBATORE,இந்தியா

  சூரரை போற்று சினிமா நல்லாயில்லை 5mark

 • dinamalar poiyen - dinamalr,இந்தியா

  அந்த காலத்தில் அப்படி அட்டகாசம் பண்ணி இருகாங்க, அதனால் தான் இப்ப அப்படி வருது, பாதிக்கப்பட்டவன் சும்மா இருப்பானா

  • jagan - Chennai,இலங்கை

   ஆமாம் OBC MBC BC போன்ற குரூப்புகள் அந்த காலத்தில் பண்ணிய அட்டகாசம் இல்லை அநியாயம்

 • Ashok Subramaniam - Chennai,யூ.எஸ்.ஏ

  இந்த படம் விமரிசனத்துக்கு தகுதியில்லாத ஒன்று.. இது உண்மையான பயோபிக் அல்ல.. திராவிடகட்சிகளின் கருத்தியலை திணிக்கும் ஒரு மூன்றாம் தர படமே.. உண்மையாக வென்றவர் ஒரு அந்தணர் என்பதை மறைத்து, தலித்-உயர்ஜாதி போராட்டமாகச் சித்தரித்து, ஜாதி, இன சாயங்களைப் பூசி, இன்னும் குரோதங்களை வளர்த்திருக்கிறீர்கள்.. இதோ ஒரு விமானப் படை பைலட்டின் மனைவியின் விமரிசனம்... இதையும் நேர்மைத் துணிவிருந்தால் பிரசுரியுங்கள் கடந்த ஒரு வாரமாக சூரரை போற்று திரைப்படத்தின் ஒரு கலவையான விமர்சனத்தை முக நூலில் படித்தேன். சினிமா என்றால் சில அதீத கற்பனையுடன் இருந்தால் தான் அது ரசிகர்களை கவரும் என்பதில் ஐயமில்லை. ஆனால் சில prestigious institute களையும் நாட்டின் ராணுவத்தை பற்றியும் படமெடுக்கும் போது அதன் உண்மைத்தன்மை மாறாமல் படமெடுப்பது மிக அவசியம். ஒரு முகநூல் நண்பர் மிகுந்த கவலையுடன் தனது ஐயங்களை வெளிபடுத்தி இருந்தார். சூர்யா அதில் air forceல் captain ஆக பணிபுரிவதாகவும், தந்தையின் இறப்புச் செய்தி கேட்டு விமான நிலையத்தில் business class ticket ற்கு காசில்லாமல் அங்கிருப்பவர்களை கெஞ்சுவதாகவும் காட்சியமைக்கப்பட்டுள்ளது. Airforce ல் captain rank உள்ளதா? ஒரு அதிகாரியின் சம்பளம் விமான டிக்கெட் வாங்க முடியாத அளவிற்கு குறைவானதா? என்று உண்மையாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார். சமீப காலமாக நான் தமிழ் சினிமாக்களை பார்ப்பதை முற்றிலும் தவிர்க்கிறேன். அதுவும் இந்த இம்சை போராளி ஹீரோக்களின் படங்களை TV ல் வந்தாலும் பார்ப்பதில்லை. விஷயம் Air force சம்பந்தப்பட்டது என்பதால் எனக்கு தெரிந்ததை இதில் பதிவிடுகிறேன். முதலில் Air force ல் Captain என்ற Rank இல்லை. அதில் பணிபுரியும் கடைநிலை ஊழியரை கேட்டால் கூட Rank tem பற்றி தொடக்க ரேங்கிலிருந்து Chief வரை அழகாக சொல்லி விடுவார்கள். இரண்டாவதாக இந்த மாதிரியான அவசர தருணங்களில் உடன் பணிபுரிபவர்கள் அந்த நபருக்கு தேவையான (பண உதவி உட்பட) அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்து விமான மற்றும் ரயில் நிலையம் வந்து வழி அனுப்பி விட்டு செல்வார்கள். இவை அனைத்தும் அந்த நபர் பணிபுரியும் இடத்தின் commander ன் மேற்பார்வையில் நடக்கும். எங்கள் வாழ்விலேயே இந்த மாதிரியான பல சம்பவங்கள் நடந்துள்ளது. 20 வருடங்களுக்கு முன் என் கணவர் ஶ்ரீநகரில் பணியிலிருந்தார். அவரின் அண்ணாவிற்கு accident brain hemorrhage ஆகிவிட்டது நிலைமை படு serious என்று messageவந்தது. ATM இல்லாத காலம் அது. அவர் பணிபுரிந்த unit ல் இருந்த அனைவரும் தன்கையில் இருந்ததை எல்லாம் கொடுத்து air ticket book செய்து அனுப்பி வைத்தனர். மற்றொரு முறை மாமனாருக்கு heart attack என message வந்தது. ஒருவர் ticket book செய்ய இன்னொருவர் bank லிருந்து பணம் செய்ய என அடுத்த அரைமணி நேரத்தில் அவர் flight ஏறி விட்டார். இது தான் எங்களின் ராணுவ குடும்பம். யாருக்கு என்ன நேர்ந்தால் என்ன என்று உட்கார்ந்திருப்பவர்கள் இல்லை நாங்கள். இவர்களின் படத்தை யாரேனும் எதிர்மறை விமர்சனம் செய்து விட்டால் , ஒரு படம் எடுப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? அந்த படத்திற்கு பின் எத்தனை பேரின் உழைப்பு இருக்கிறது தெரியுமா ? என பொங்கி எழுவார்கள். ஆனால் இவர்கள் கொஞ்சமும் யோசிக்காமல் பல கல்வியாளர்கள் பல வருடங்களாக பல நாடுகள் சென்று ஆராய்ந்து எழுதிய புதிய கல்வி கொள்கையை விமர்சிப்பது, ராணுவம் போலிஸ் என்று அனைத்தையும் விமர்சிப்பதை நாம் எதுவும் கேட்டு விடக் கூடாது. "சூரரை போற்று"படத்தின் சில காட்சிகள் எங்கள் தாம்பரம் air force ல் படமாக்கப் பட்டது. படப்பிடிப்பு முடிந்ததும் எல்லோரும் சூர்யாவுடன் photo எடுத்துக் கொண்டனர். அப்போது நடந்ததே ஒரு கூத்து . தீடீரென campus க்கு வெளியே இருந்து ஒரு கூட்டம் வந்தது. அவர்கள் கற்பூரம் காட்டி (பெரியார் பூமிங்க நம்புங்க) மாலை அணிவித்து இவை அனைத்தையும் பொறுமையாக பார்த்தார் நமது போலிஸ் சிங்கம், அகரத்தின் ஆதவன் அதை வேண்டாம் என்று தடுக்கவும் இல்லை,அவர்களை விலக்கவும் இல்லை. இவர்களின் பொதுவுடமை,ஜாதி மறுப்பு,நீதி நேர்மை எல்லாம் திரையில் மட்டுமே. இவர்களை நம்பி பணத்தையும் வீணடித்து, நேரத்தையும் வீணடிக்கும் நம் மக்களை என்ன சொல்வது?...

 • bal - chennai,இந்தியா

  திகவிடமிருந்து எத்தனை கோடி கிடைத்தது சூர்யாவுக்கு...ஒரு ஐயங்கார் வாழ்கை வரலாறை பட்டியலினத்தர் சாதித்ததுபோல் ஏன் இந்த பொய்...யாரை ஏமாற்றும் வேலை.

 • bal - chennai,இந்தியா

  கதையை ஒரு பிராம்மணரின் வாழ்க்கையை காப்பியடித்துவிட்டு பெரியாரின் போட்டோ மற்றும் இந்த ஹீரோ பட்டியலினத்தர் என்று சொல்வதற்கு வெட்கமாக இல்லையா...அதற்கு மேல் சாதியை பற்றி திட்ட வேறு செய்கிறார். இது மாதிரி ஒரு பொழப்பு தேவையா...சூர்யாவுக்கு...

 • Surendran - Singapore,சிங்கப்பூர்

  Super hit film of year 2020 but if realase in theatre maybe become blockbuster movie of the year.sum fucking people give stupid review fucking brahma people

 • Aarkay - Pondy,இந்தியா

  படத்தில் எடுத்துக்கொண்ட பிரச்னை, ஏழை, பணக்காரன் இடையே உள்ள இடைவெளி, affordability, இக்கருவில், ஜாதியை நுழைத்து, பிராமணர்களை மட்டம்தட்டவேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக ஒரு இரயில் காட்சி வைத்து, பெயர்களில் கூட ஜாதி முத்திரை குத்தி, தமிழ் சினிமா எங்கு சென்றுகொண்டிருக்கிறது என தெளிவாக காட்டிவிட்டார்கள். ஊருக்கு இளைத்தது பிள்ளையார் கோயில் ஆண்டி ஜாதியை நீங்களே தூக்கிப்பிடித்துக்கொண்டு, ஜாதி ஒழியவேண்டுமென்பீர்கள் சூப்பர் சூர்யா சம்சுதீன்

 • kudiyanavan - coimbatore ,இந்தியா

  எல்லாம் சரி கோபிநாத் கல்யாணத்துல பெரியார் படம் இருந்துச்சா. உண்மை கதையை உண்மையா எடுங்க. உங்க (சூர்யா என்னும் சம்சுதீன்) ... காட்சியை திணிக்காதிங்க. உனக்கு புத்தி வரும் காலம் வரும் விரைவில்

 • jagan - Chennai,இலங்கை

  என்ன கருப்பு சட்டை போட்டாச்சு, எனவே பிராமணர்களை மட்டமாக கூவித்தான் ஆகா வேண்டும். ஆனா பாருங்க அதுக்கும் ஒரு பிராமணரின் (கோபிநாத்) கதை தான் தேவை படுகிறதுது. ஏன் என்றால் சாதிப்பது அவர்களே. இந்த மட்ட புத்தி வெறுப்பு அரசியல் செய்யும் சூரியா படம் தோல்வி அடைந்து நஷ்டம் ஏற்பட வாழ்த்துக்கள்.

 • venkata -

  திராவிடர் கழகத்தில் பணம் வாங்கியள்ளீர்களோ ? பல் வேறு சமுதாய மக்கள் பல்வேறு சாதனைகளை செய்துள்ளனர். அது என்ன கர்நாடகாவாவில் வாழ்ந்த ஐயங்கார் வாழ்க்கை கதையை பட்டியல் இன திராவிடக் கழக கேரக்ட்ராக்கி உங்கள் கறுப்புச் சட்டை முதலாளிக்கு விசுவாசம் காட்டியுள்ளீர்கள் போல தெரிகிறது. கதையில் உண்மைதான் உயிர். உயிரை எடுத்து விட்டால் அதன பெயர் அது . நல்ல கதைகளை உண்மையுடன் பயணித்து உரக்கச் சொல்லங்கள். ரோமானிய சீன அரேபிய அடிமைத் தளை விலங்குகளை உடைத்தெறிந்து நாங்கள் அறிந்த நேர்மையான சூர்யாவாக வாங்க . வரவேற்ப்போம்.

 • Vaduvooraan - Chennai ,இந்தியா

  இந்த பெண் இயக்குனர் படங்கள் சற்று வித்தியாசமாக நேர்த்தியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் பார்க்க உட்கார்ந்தேன். படத்தின் சுவாரசியத்தை குறைப்பவை இரண்டு விஷயங்கள்: படத்தின் நீளம் இன்னொன்று கதாபாத்திரங்களின் குணாதிசயங்களை நிலைநாட்ட வைக்கப்பட்டிருக்கும் ஆரம்ப காட்சிகள் இவை போதாது என்று மணிரத்னம் பாணியில் அவசர அவசரமாக பேசும் ஓரிரு வரி வசனங்களை நாம் கேட்டு புரிந்து கொள்வதற்குள் சடார் சடாரென்று காட்சிகள் மாறிவிடுகின்றன. கதை liniear narration உத்தியை பயன்படுத்தாது முன்னும் பின்னும் நகர்வதால் பார்ப்பவர்கள் ஓரிரண்டு முறை ரீவைண்ட் பண்ணி பார்க்க வேண்டி இருக்கிறது அல்லது காட்சி நடக்கும் தேதி இடம் போன்ற விபரங்களை அவ்வப்போது திரையின் ஒரு மூலையில் காட்டுகிறார்கள் அவற்றை ஒரு நோட் புத்தகத்தில் குறித்துக்கொண்டு சரி பார்த்தால் கதையின் போக்கு நடக்கும் காலம் இவை சரிவர புரியவரும்.

 • sumutha - chennai - Chennai,இந்தியா

  மேலே உள்ள கருத்துக்களில் விமர்சனத்தில் சொல்லாமல் விட்ட விஷயம் அதெப்படி ஏர் ஃபோர்ஸ் அதிகாரி டிக்கட்டுக்கு பணம் பத்தலைன்னு அப்படியா பிச்சை எடுப்பார்? போன் வசதி இருக்கும் இந்த காலத்தில் அவருடன் பணியாற்றும் நண்பர்களிடம் கேட்க தோன்றாமல் இப்படி ஒரு காட்சி வைத்து விமான படை அதிகாரிகளை அசிங்க படுத்தி இருக்கிறார்கள். படத்தில் சம்பந்தமே இல்லாமல் மனு என்பதும், லூசுக்கூ, மடக்கூ என்பதும் எப்படி மக்களை நாகரீகத்தில் முன்னேற்றும்? எப்படியோ 1 ருபாய் கட்டணத்தில் பறந்து போய் 500ரூபாய் டாக்ஸி பிடித்து 1500 ருபாய் கொடுத்து தன் அபிமான நடிகரின் ரிலீசுக்கு போய் 150 ரூபாய் காபி குடித்து 150 ரூபாய் பாப்கார்ன் தின்று மறுபடி டாக்ஸி வாடகை 500 கொடுத்து விமான நிலையம் வந்து மீண்டும் 1 ரூபாய் கட்டணத்தில் ஊர் போய் சேரலாம். அவ்வளவே

 • Amuthe Thamile - New Jersey,யூ.எஸ்.ஏ

  அநேகமாக 2010 ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன், பெங்களூரூ ஏர்போர்ட்டில் இருந்து கத்தார் (Qatar) க்கு பயணிப்பதற்க்கு காத்திருந்தேன் , அப்போது அருகில் இருந்த புத்தக கடையில் இருந்த சிம்ப்லி பிளை ( Simply Fly) திரு கோபிநாத் எழுதிய புத்தகத்தை வாங்கிவந்து கத்தார் வீட்டுக்கு வந்ததும் படிக்க துவங்கினேன், மிகவும் உண்மையாக உணர்வுபூர்வமாக இருந்தது, அப்போது என் குழந்தைகளுக்கு நான் இரவில் தினமும் ஒரு கதை சொல்லும் பழக்கம் வைத்திருந்தேன், இந்த புத்தகம் உணர்வு பூர்வமாக, உண்மையாக இருந்ததால் தினமும் ஐந்து பக்கங்கள் வரை படித்து அதை கதையாக தினமும் சொன்னேன், கிட்டத்தட்ட ஒரு மாதம் இருக்கும் முழுவதும் சொல்லு முடிக்க, இன்றும் என் குழந்தைகள் அந்த அருமையான தருணங்களை நினைவு கூறுகின்றனர். அதில் Vija Mallaya எப்படி ஏர் டக்கான் நிறுவனத்தை அவரிடம் இருந்து பிடுங்கிக்கொண்டார் என்பதை சொல்லி இருப்பர் ,அதே நேரம் எவ்வளவு பெரிய தொகை கொடுத்தார் என்பதையும் சொல்லி இருப்பர், இருப்பினும், கஷ்டப்பட்டு நிர்மாணித்த ஒரு தொழிலை சூழ்நிலை காரணம் காட்டி அதை அவனிடம் இருந்து பிடுங்கி கொள்வது போன்ற கொடிய செயல் வேற ஏதும் இருக்க முடியாது. இன்றைக்கு இருக்கும் "ஐயங்கார் பேக்கரி " என்ற பிடாண்டும் அவர் உண்டாக்கியதே. இந்திய மேலாதிக்க சமூகம் எவ்வளவு கொடுங்கோல் எண்ணம் கொண்டது என்பதற்கு மிக சரியான உதாரணம் இந்த புத்தகம்.

 • ஜெயகுமார் - சென்னை ,இந்தியா

  குறை சொல்வது, மிக மிக சுலபம் ஒரு செயலை செய்து பாருங்கள் அதன் அருமை தெரியும்... Hands up sooriya... வாழ்த்துக்கள்

 • mohan raj - coimbatore,கனடா

  இந்த படத்துல ஏதாவது ஒரு லாஜிக் இருக்கா???... எந்த ஒரு ஏர்போர்ட் இவ்வளவு செக்யூரிட்டி இல்லாம இருக்கு , ஒரு வௌ சூர்யாவோட சொந்த airporata இருக்குமோ??... மோதல் அரை மணி நேரத்துல 4 பாட்டு .அடுத்த 1 மணி நேரத்துல இன்னும் 2 பாட்டு ... உண்மையான கோபிநாத் இந்த படத்தை மட்டும் பாத்த கண்டிப்பா தொங்கிருவாரு ... ஏன் ஒரு லாஜிக் வேண்டாம்... ஆனா ஒன்னு ,காசு எப்படி குறுக்கு வழியில சம்பாதிக்கணும்னு சூர்யா நல்லா தெரிஞ்சு வெச்சிருக்கான் ஒரு கதையே இல்லாம

  • Chitra Sydney - Sydney,ஆஸ்திரேலியா

   Captain Gopinath, on Twitter, heaped praises on the entire and crew involved in the making of the film. He wrote, "Heavily fictionalised but outstanding in capturing the true essence of the story of my book. A real rollercoaster. Yes, watched it last night. I couldn't help laughing and crying on many family scenes that brought memories. Dramatised but true to the undying spirit of triumph of hope against struggles and tribulations of an entrepreneur with disadvantaged rural background over overwhelming odds." Captain Gopinath also applauded the performance of Suriya and Aparna Balamurali.

  • babu - Atlanta,யூ.எஸ்.ஏ

   what is the necessity of imposing EVR Ramasamy view in this film (G.R Gopinath was Iyengar from Mysore Province) . 20 years back Tamil cinema was under commies , now under these missionaries and Separatists.

 • Ramanujan - Chennai,இந்தியா

  இந்த கால கட்டத்திற்கு பொருந்தாத சப்ஜெக்ட். பட்ஜெட் ஏர்லைன்ஸ் வந்து பிரபலமாகி 25 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இப்போது இதை ஒரு போராட்டமாக சொல்வது பழையது சாப்பிடுவது போல உள்ளது.

  • Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்

   ஹஹஹாஹ்....சுதந்திரம் வாங்கி அம்புட்டு வருஷம் கழிச்சு காந்திய பத்தி படம் எடுத்தது கூட பழையது சாப்பிட்டது போல இருந்திருக்குமே? இதுதான் படம் இதுதான் கதைன்னு தெளிவா சொல்லித்தான் படத்தை எடுத்தானுக படத்தையும் வெளியிட்டானுக புடிச்ச பாருங்க புடிக்கலீன்னா இருட்டறையில் பொய் பாருங்க... வேணும்ன்னா ஒன்னு செய்யலாம் அடுத்ததடவ என்ன படம் எடுக்கணும்ன்னு உங்களை கேக்க சொல்றோம்...போதுமா?

 • NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா

  இந்த படத்திற்கு 1 மார்க் அதிகம்

  • JMK - Madurai,இந்தியா

   பீகிள் படத்தைவிட எவ்ளவோ மேலே ? சூப்பர்

 • NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா

  உண்மையை சொல்லவேண்டும் என்றால் ஒரு ஐயங்காரின் நிஜ கதையை திருடர் கழக பிரச்சார கூட்டமாய் மாற்றி விட்டிருக்கிறார்கள் , இது கண்டிப்பாக சூர்யாவின் தலையீடாக தான் தெரிகிறது. ஆனால் அதையும் மீறி சுதா கொங்காரா மிளிர்கிறார் , சூர்யாவை விட இந்த கதைக்கு மாதவனோ ஆர்யாவோ இருந்திருக்கலாம் , சூர்யாவை போட்டு கெடுத்து விட்டார்கள் . படம் முழுக்க கருப்பு சட்டை , அவங்க நம்மை வளர விடமாட்டாங்க , அவங்க நம்மை அடக்க துடிக்கிறாங்க என்பதனை அழுத்தி சொல்வதில் தெரிகிறது அசிங்கமான திருடர் கழக பின்புத்தி

  • vadivelu - thenkaasi,யூ.எஸ்.ஏ

   ஏர்பிடித்தவனும் ஏரோப்ளேனில் செல்லும் "உதான்" திட்டம். இந்த திட்டத்தை மோடி அரசுதான் 2017 ஏப்ரல் மாதம் துவக்கி வைத்தார். அதன் நிர்வாக இயக்குனராகதான் “சூரரை போற்று” படத்தின் இறுதியாக வந்த நிஜ வாழ்க்கையில் போராடிய கோபிநாத்தை பணி அமர்த்தியுள்ளனர். இந்தியாவில் 128 வழித்தடங்களில் இச்சேவை கொண்டுவர திட்டமிட்டு பல்வேறு மாநிலங்களில் செயல்படுத்தபட்டும் வருகின்றனர். அதில் ஒன்று தான் வேலூர் விமான நிலையமும், ஒரு மணிநேர பயணம் அல்லது 500 கிலோ மீட்டருக்கு 2500 ரூபாய் டிக்கெட் என நிர்ணயம் செய்துள்ளனர். சாதாரண, நடுத்தர மக்கள் பயன் பெறவே உதான் திட்டம் கொண்டு வரப்பட்டது என்பதை இங்குள்ள மோடி எதிர்ப்பாளர்களுக்கு புரிய வைப்பது மிக கடினம். ஒரு சாமானியனின் லட்சியக்கனவை நனவாக்கிய மோடி என்ற சூரரை போற்றுவோம்..

  • kumar - Erode,இந்தியா

   கேப்டன் கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் தான் 'சூரரைப் போற்று' படம். கேப்டன் கோபிநாத் ஐயங்கார் சமுதாயத்தைச் சார்ந்தவர். ஆனால் அவரைப் பட்டியல் சமுதாயத்தைச் சார்ந்தவராக காண்பித்திருக்கின்றார்கள் படத்தில். அதேசமயம், ஹீரோவின் எதிரிகளை மட்டும் பிராமணர்களாகக் காண்பித்திருக்கின்றார்கள் மேலும், கேப்டன் கோபிநாத்தின் திருமணம் ஐயங்கார் முறைப்படி நடந்தத் திருமணம். ஆனால் திரைப்படத்தில் ஈ.வெ.ரா. கோஷ்டியின் சுயமரியாதைத் திருமணமாகக் காண்பித்திருக்கிறார்கள். இதெல்லாம் நேர்மையா? கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்... கேப்டன் கோபிநாத் உண்மையில் பட்டியல் சமுதாயத்தைச் சார்ந்தவராக இருந்து, திரைப்படத்தில் அவரை பிராமணராக மாற்றிக் காண்பித்திருந்தால் இந்நேரம் எவ்வளவு எதிர்ப்பு வந்திருக்கும்? அதேபோல் கேப்டன் கோபிநாத் உண்மையில் சுயமரியாதைத் திருமணம் செய்திருந்து, படத்தில் அதனை மறைத்து அவர் வைதீக முறைப்படி திருமணம் செய்துகொண்டதாகக் காண்பித்திருந்தால் என்னவாகியிருக்கும்??? நம்மை பொருத்தவரை எதுவும் உயர்ந்த சாதியில்லை எதுவும் நிச்சயம் தாழ்ந்த சாதியில்லை. சாதியில் உயர்வு, தாழ்வு காண்பது பேதமை என்று திண்ணமாக எண்ணுகிறோம். அதேவேளை, திரைப்படம் உள்ளிட்ட படைப்புகளில் உள்ளது உள்ளபடி சொல்லப்பட வேண்டுமென்று நினைக்கிறோம். NEET, EIA Draft உள்ளிட்ட விசயங்களுக்கு எதிராகவெல்லாம் பொங்கும் புத்திசாலி நடிகர் சூர்யா, தனது படம் ஓட வேண்டும், அதன்மூலம் கோடிகோடியாய் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக கேப்டன் கோபிநாத் பற்றிய உண்மை விசயங்களை இப்படித் திரித்துக் கூறி படம் எடுக்கலாமா? தனது விசயங்களில் நேர்மையின்றி நடக்கும் எவனுக்கும் அடுத்தவர்களைப் பற்றி விமர்சனம் செய்ய அருகதையில்லை தேச விரோதிகளின் கூடாரம் தான் தமிழக சினிமா துறை என்று மீண்டும் மீண்டும் தன் முகத்தைக் காட்டிக்கொண்டு இருக்கிறது.

 • ANTONYRAJ - MADURAI,இந்தியா

  ஸ்டூலை போட்டு நாலடியாரை போற்று என்று படத்துக்கு தலைப்பு வைத்திருக்கலாம்.ஒரே அறுவை அதுக்கு பேசாமல் சிங்கம் 3 சிங்கம் 4 ன்னு ஹரிகிட்ட சொல்லி என்னத்தையாவது எடுத்திருக்கலாம்.

  • g g - ,

   thambi Antony raj...siridhu gelusil arundhavum..

  • NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா

   நிஜம்தான் அந்தோணி சார் இவன் இஷ்டத்துக்கு IAF வேறு , தகுதி சுற்றுக்கு கூட தகுதி இல்லாதவனுக்கு இதெல்லாம் அதிகம் என்று பலருக்கு தெரிவதில்லை

  • s.srikanth - chennai,இந்தியா

   அந்தோணி ராஜ், உங்க கமெண்டை படிச்சு, ரசிச்சு சிரித்தேன். அருமை.

  • Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்

   டாம் குருசும் சூர்யாவும் ஒரே உயரம்...மிஷன் இம்பாஸிபிள் ரசிக்க முடிந்த லாஜிக் பாக்காத நாம இங்கே லாஜிக் பாக்கிறோம்..பிறர் .உருவத்தை வைத்து கெலிசெய்யும் அதை ரசிக்கும் மனிதனாக பிறந்த நாமெல்லாம் ஆஜானுபாகுவுடன் ஆணழகானாக இருக்கநும் என நம்ம்புறேன்....இந்தியாவில் கூர்காஸ் எனும் இனம் உண்டு அவங்களின் சராசரி உயரம் 5 அடி 3 அங்குலம் அப்போ இவங்கெல்லாம் IAF போகமுடியாதா? அப்புறம் ஏன் இவங்களை மிகசிறந்த ராணுவ வீரர்கள்ன்னு சொல்றோம்? .அதெல்லாம் சரிங்க IAF என்னா தகுதி வேணும்ன்னு கொஞ்சம் மிலிட்ரி recruitment officer மாதிரி வெளக்கமுடியுமா? எங்களைமாதிரி பாமரங்க தெருஞ்சுக்கத்தான்...

 • KavikumarRam - Indian,இந்தியா

  சம்சுதீன் சூர்யாவின் கேவலமான படம். கெட்டவனக்கூட மன்னிச்சிரலாம். ஆனா இந்த மாதிரி நல்லவன் வேஷம் போடுறவன் படத்தை எல்லாம் மக்கள் புறக்கணிக்கணும்.

  • Chitra Sydney - Sydney,ஆஸ்திரேலியா

   சம்சுதீன் சுரியாவும் ஒரு இந்தியர்தானே?

  • babu - Atlanta,யூ.எஸ்.ஏ

   Not at all if he is just insulting one community just to earn more money.

 • ram -

  the best movie in Suryas career

 • nizamudin - trichy,இந்தியா

  தினமலர் பாராட்டுக்கு நன்றி

 • vijay - coimbatore,இந்தியா

  நல்ல படத்திற்காக, நடிப்பிற்காக சூர்யாவை பிடிக்காவிட்டாலும் பாராட்டுகிறேன்.

 • Saravanan RK - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  விருது கொடுத்து போற்றும் அளவுக்கு எதுவும் இல்லை. க/பெ ரணசிங்கத்தை விட உயர்வாக ஏதும் இல்லை.

  • g g - ,

   Saravanan avargale..sathyama sollunga soorarai pottru film ah vida ranasingham nalla padama??

  • KavikumarRam - Indian,இந்தியா

   ரெண்டுமே விளங்காத படம். அவ்வளவு தான்.

 • V .வெங்கடேஷ் - சிங்கப்பூர் ,சிங்கப்பூர்

  சுயமரியாதை திருமணம் மனு தர்ம நக்கல் ஜாதி ஒழிப்பு என்று தனது சமீபகால கொள்கைகளை சூர்யா ஆங்காங்கே திணித்திருந்தாலும் இதையே முழுமையான கதையாக வைக்காதது ஆறுதல். ஐம்பது பேரை ஒரே அடியில் அடித்து சாய்க்கும் ஹீரோயிச காட்சிகள் எதுவும் இல்லாதது ஆச்சர்யம்.பாத்திரத்துக்கேற்ற பக்காவான நடிப்பு. சிவந்த நிறம் இல்லை, மேக்கப் இல்லை..அடுத்த வீட்டு பெண்ணாக அபர்ணா அசத்துகிறார். ஆனால் அறிவுஜீவித்தனம் எட்டிப்பார்க்க எப்போதும் பேசிக்கொண்டிருப்பது கொஞ்சம் அலுப்பூட்டுகிறது. ஆனால் தன்னம்பிக்கை மிகுந்த அவரது கேரக்டருக்கு அந்த கெத்தும் நன்றாகவே இருக்கிறது. சூர்யாவின் லைஃப் பார்ட்னராகவும் பிஸ்னஸ் பார்ட்னராகவும் தூள் படுத்துகிறார். பரேஷ் ரவால் குஜராத்தி வியாபாரியாக மென்மையான வில்லன்.மோகன் பாபு விறைப்பாகவும் பின்னர் வியப்பாகவும் மாறும் அற்புத கேரக்டர். அம்மாவாக ஊர்வசி, நண்பனாக காளிவெங்கட் எல்லாரும் கச்சிதம். விலைபோன அதிகாரியாக ரஜினி முருகன் அப்பா நடிகர் அச்சுத குமார். நண்பர்களாக விவேக் & கிருஷ்ணகுமார். ஒருவருக்கு சே என்று வலிந்து திணிக்கப்பட்ட பெயர்.. பாடல்களை குறைத்திருக்கலாம் ..எல்லா பாட்டும் ஏ சண்டைக்காரா டைப்பிலேயே இருக்கிறது.. சுதா கொங்கராவின் சிறப்பான இயக்கத்தில் விறுவிறுப்பாக ஆரம்பிக்கும் படம் ஒரே போன்ற தடைகளை மீண்டும் மீண்டும் ஹீரோ எதிர்கொண்டு திணறும் போது நொண்ட ஆரம்பிக்கிறது. நீளத்தை குறைத்து வேகத்தை சேர்த்திருந்தால் சூரரை இன்னும் பெரிய வெற்றி வீரராக போற்றியிருக்கலாம்.

  • NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா

   அருமையான விமரிசனம் சார்

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement