Advertisement

மூக்குத்தி அம்மன்

Share

நடிப்பு - ஆர்ஜே பாலாஜி, நயன்தாரா, அஜய் கோஷ்
தயாரிப்பு - வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்
இயக்கம் - ஆர்ஜே பாலாஜி, என்ஜே சரவணன்
இசை - கிரிஷ் கோபாலகிருஷ்ணன்
வெளியான தேதி - 14 நவம்பர் 2020
நேரம் - 2 மணி நேரம் 14 நிமிடம்
ரேட்டிங் - 2.25/5

தமிழ் சினிமாவில் பக்திப் படங்கள் வந்து நீண்ட காலமாகிவிட்டது. இந்தக் காலத்து பெண்கள் கூட பக்திப் படங்களைப் பார்த்து ரசிப்பார்களா என்பது சந்தேகம்தான்.

இருப்பினும், ஒரு பக்திப் படத்தை நகைச்சுவை கலந்து கொடுத்தால் இந்தக் காலத்திய அனைத்து ரசிகர்களும் ரசிப்பார்கள் என ஆர்ஜே பாலாஜி நினைத்திருக்கலாம். ஆனால், அதற்காக அவர் அதிகம் மெனக்கெடவில்லை. கொஞ்சம் நீட்டிக்கப்பட்ட யு டியுப் நகைச்சுவை நிகழ்ச்சி போன்றுதான் இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார்.

நாகர்கோவிலில் உள்ள லோக்கல் டிவி சேனலில் நிருபராகப் பணியாற்றுபவர் ஆர்ஜே பாலாஜி. அம்மா ஊர்வசி, மூன்று தங்கைகள், ஒரு தாத்தா. அப்பா சிறு வயதிலேயே வீட்டை விட்டு ஓடி விட்டதால் குடும்பச் சுமை அவர் தலை மீது இருக்கிறது. பார்க்கும் பெண்கள் எல்லாம் முதிர் கண்ணனாக இருக்கும் பாலாஜியின் குடும்ப சூழலைப் பார்த்து பிடிக்கவில்லை என்கிறார்கள். குலதெய்வமான மூக்குத்தி அம்மனை சென்று வழிபட்டால் விடிவு பிறக்கும் என்கிறார்கள். குடும்பமே குல தெய்வம் கோவிலுக்குச் சென்று வழிபடுகிறது- பாலாஜியின் வேண்டுதலுக்கு மனமிரங்கி மூக்குத்தி அம்மனே நேரில் வருகிறார். அந்தப் பகுதியில் உள்ள 11,000 ஏக்கர் நிலத்தை சாமியார் அஜய் கோஷ் தனதாக்கிக் கொள்ள திட்டமிடுகிறார். தங்கள் பகுதி நிலத்தைக் காக்க அம்மனும், நிருபரும் என்ன செய்கிறார்கள் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

இதற்கு முன்பே ஆர்ஜே பாலாஜி கதாநாயகனாக நடித்த 'எல்கேஜி' படம் ஒரு அரசியல் கிண்டல் படமாக அமைந்து ஆரம்பம் முதல் கடைசி வரை நகைச்சுவையுடனும், விறுவிறுப்புடனும் இருந்து ரசிக்க வைத்தது. ஆனால், இந்தப் படத்தில் அவை இரண்டுமே ஆங்காங்கேதான் இடம் பெற்றுள்ளன, அதுவே படத்தின் பெரிய குறையாகவும் அமைந்துவிட்டது. படத்தின் கதைக்காக பெரிதாக யோசிக்கவில்லை. இடைவேளை வரை இருக்கும் கொஞ்சம் சுவாரசியம், இடைவேளைக்குப் பின் காணாமல் போய்விடுகிறது- டிவி பேட்டி அது இது என பல படங்களில் பார்த்ததை வைத்து ஒப்பேற்றி இருக்கிறார்கள் இயக்குனர் பாலாஜி மற்றும் சரவணன்.

பாலாஜி தனக்குப் பொருத்தமாக இருக்கும் அப்பாவி ஆண்மகன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். பேச்சிலும், கிண்டலிலும் குறைவில்லை, ஆனால் அதில் காமெடிக்குத்தான் பஞ்சம் இருக்கிறது. போலி சாமியார் என்றால் வழக்கம் போல இந்து சாமியார்களை மட்டும்தான் சினிமாவில் கிண்டலடிக்கிறார்கள். இந்தப் படத்தில் தமிழ்நாட்டின் இரு பிரபலமான சாமியார்களை கிண்டலடித்துள்ளது போல் தெரிகிறது.

மூக்குத்தி அம்மனாக நயன்தாரா. தான் ஏற்று நடிக்கும் எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் தன்னைப் பொருத்திக் கொள்ளும் வித்தை அறிந்தவர் நயன்தாரா. இந்தப் படத்திலும் அப்படியே. அம்மனாக அவரை ஏற்றுக் கொள்ள முடிகிறது. கண்களிலும், முகத்திலும் ஒரு ஜொலிப்பு தெரிகிறது. படம் முழுவதும் அவர் வரவில்லை, கொஞ்சம் நீட்டிக்கப்பட்ட சிறப்புத் தோற்றம் போலத்தான் வந்து போகிறார்.

போலி சாமியாராக அஜய் கோஷ். இங்குள்ள சாமியார்களின் வீடியோக்களை அவரிடம் கொடுத்திருப்பார்கள் போலும், அதை அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார். இரு தினங்களுக்கு முன்பு 'சூரரைப் போற்று' படத்தில் ஊர்வசியின் சிறந்த நடிப்பைப் பார்த்தோம். இரண்டு நாள் இடைவெளியில் மற்றுமொரு சிறப்பான கதாபாத்திரம், சிறப்பான நடிப்பு. பாலாஜியின் தாத்தாவாக மௌலி, அதிக வேலையில்லை. தங்கைகளாக நடித்திருப்பவர்களும் தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையில் எல்ஆர் ஈஸ்வரி பாடும் அம்மன் பாடல் மட்டுமே ரசிக்க வைத்துள்ளது. பின்னணி இசையில் சமாளித்துவிடுகிறார். நாகர்கோவிலின் இயற்கை அழகை கண்முன் கொண்டு வந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன். நயன்தாராவைப் படமாக்க ஸ்பெஷல் பில்டர் எல்லாம் போட்டிருப்பார் போலிருக்கிறது.

ஒரு வரிக்கதையாக இருந்தாலும், ஆழமில்லாத மேலோட்டமான திரைக்கதை பல இடங்களில் சுவாரசியத்தைக் குறைத்துகிறது. இன்னும் கொஞ்சம் 'ஹோம் ஒர்க்' செய்திருக்க வேண்டும்.

மூக்குத்தி அம்மன் - குறைவான முயற்சி

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (34)

 • sankaranarayanan - K.K.Valasi, Tenkasi,இந்தியா

  மீண்டும் மீண்டும் பார்க்க வைத்த திரைக்கதை.6 முதல் 16 வயது குழந்தைகள் விரும்பி பார்த்தனர். படத்தின் முடிவில் சொல்லப்பட்ட கருத்து சரியானது.உண்மையான பக்திக்கு தெய்வம் / பஞ்ச பூத சக்தி செவி சாய்க்கும் Good Film . Thanking you to all members participated in this film and Dinamalar Tamil magazine.

 • லதா சந்திரன் - Chennai,இந்தியா

  படத்தின் மையக் கருத்து ஒத்துக்கொள்ள வேண்டிய விஷயம் தான். என்றாலும் ஹிந்து மத கடவுள் வழிபாட்டு நம்பிக்கைகளை ரொம்பவே கிண்டல் அடித்திருக்கிறீர்கள் .இந்த தைரியம் மற்ற மதங்களை விமர்சனம் செய்வதில் இருக்கிறதா உங்களுக்கு?? படத்துக்காக யாரிடம் எவ்வளவு வாங்கினீர்கள் பாலாஜி

 • bal - chennai,இந்தியா

  திருட்டு பயலுக...திரும்பவும் திராவிட கழகத்திடம் கட்டு கட்டா வாங்கிட்டானுக...இந்து மதத்தை கேவலப்படுத்த.இது மாதிரி படம் எடுத்து.

 • nayanfan -

  awsum movie...nayan is super gorgeous and apt for the role...worth watching...

 • Velmurugan - Tuticorin,இந்தியா

  Unka yarukum kula Swamy enpathu theriyala illa all religion pray god don't consider human person as a god it's awesome movie I love it thanks VIP Disney and hotstar

 • velvelevel -

  பாலாஜி ஒரு மதத்தை மட்டும் குறிவைத்து எடுத்த ரகஸியம் காருண்யமோ . போதையாட்ட மனேபாலா காட்சிகள் மறைத்தது உதயமாயமோ. பாலியலிம்சை பாதிரிகளையும் ஹலாலா இமாம்களையும் கண்டித்தது வரவேற்க்கத் தக்கது.

 • copy and paste - paramakudi,இந்தியா

  வணக்கம் இது ஏற்கனவே ஹிந்தியில் வந்த ஒ மை கடவுளே அக்சய் குமார் நடித்த படம் தான், அடுத்து தெலுங்கில் இதையா கோபால கோபால என்று எடுத்தார்கள். வெங்கடேஷ் ஹீரோ ...பவன் கல்யாண் கடவுள் ...இதையே அப்டியே மாற்றி குறைவான படசெட்டில் தமிழில் இந்த படம் எடுத்திருக்கிறார்கள் ........படம் பார்த்த எல்லோருக்கும் தெரியும் ....நன்றி ....

 • S Bala - London,யுனைடெட் கிங்டம்

  சாமியார் வந்த பிறகு அரை மணி நேரம் பார்க்கலாம். அவ்வளவுதான். மார்க் ௦.5

 • Velayutharaja Raja - Thirupputhur,இந்தியா

  குடும்பத்தோடு பார்க்க அருமையான படம்..சாமிகளின் பெயரைச் சொல்லி ஏமாற்றும் கார்பரேட் ஆசாமிகளை விரட்டியடிக்க வேண்டும்.. நீக்கப்பட்ட அனைத்துக்காட்சிகளையும் படத்தில் சேர்க்க வேண்டும்..

 • VARATHARAJ - chennai,இந்தியா

  why Manobala scene mocking christian priests removed ? afraid of extremists ? but the same scene was circulated in large way.

 • Saravanan RK - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  சூரரை போற்று படத்தை விடவும் மிகவும் நன்றாகவே உள்ளது. மனம் வேண்டும் நல்ல மதிப்பெண் தரவும், பாராட்டவும். கார்பொரேட் திரைப்படத்துக்கே அதிக முக்கியத்துவமா?

 • resanvs - Bangalore,இந்தியா

  உங்கள் விமர்சனம்தான் மோசம். இப்படி விமர்சனம் எழுதி யாரை காப்பாத்த போகிறீர்கள்? ரொம்ப நல்ல படம். கண்டிப்பாக குடும்பத்தோடு, குழந்தைகளோடு பாருங்கள். அருமையான மெசேஜ் இருக்கிறது . பாலாஜிக்கு நன்றி.

 • Rajan - Bangalore,இந்தியா

  படம் சூப்பரா இருக்கு

 • Meevin - Madurai,இந்தியா

  படம் 4.5/5 விமர்சனம் 1/5

 • Nallavan Kettavan - Madurai,இந்தியா

  CD seen removed from movie.. what happen RJ balaji ??.. any pressure from particular community not to show that clip

 • G.Prabakaran - Chennai,இந்தியா

  படம் மிக அருமையாக உள்ளது நயன்தாராவின் கிளைமாக்ஸ் பேச்சு சூப்பர். இப்போதுள்ள வன நிலங்களை கொள்ளை அடிக்கும் சாமியார்களை சவுக்கால் அடிப்பது போல் உள்ளது. குறிப்பாக ஜக்கியின் வன நில ஆக்ரிமைப்பை வெளிச்சம் போட்டு காட்டி உள்ளது. ஜக்கியின் நிலம் வெளியிங்கிரி மலை என்றால் இந்த படத்தில் வெள்ளிமலை அவ்வளவுதான் வித்யாசம்.

 • Sai Prasath -

  படம் நல்லாத்தான் இருக்கு. நானே ரெண்டு தடவ பார்த்தேன்... ஹாட்ஸ்டார்ல... உங்க விமர்சனம் சரியில்லை. அதுவும் இத குடும்பத்தோட பார்த்தோம். ஒரு நல்ல feel good movie.

 • Chandramohan Shankar - Chengalpattu,இந்தியா

  வெகு நாட்களுக்கு பிறகு நல்ல ஒரு திரைபடம் மிக அருமையாக உள்ளது

 • நந்தினி -

  பத்துக்கும் மேற்பட்டோர் விமர்சனம்தான் மோசம் என சொல்லி இருப்பது விமர்சகரின் தகுதியின்மையை வெளிப்படுத்துகிறது என எடுத்துக்கொள்ளவா? அல்லது விமர்சகர் வயசானவர்.. படம் பார்த்தோர் இளைஞர்கூட்டம் என எடுத்துக்கொள்ளவா?

 • ராஜ்குமார் -

  படம் பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது நீண்ட நாள் கழித்து சிரித்து சிரித்து பார்த்த படத்தில் இதுவும் ஒன்று விமர்சனம் என்ற பெயரில் ஒரு மொக்கை விமர்சனத்தை பதிவு செய்துள்ளார்கள். படம் மிக அருமை.

 • Jayanthi - Tirupur,இந்தியா

  Film is really very nice. Hats off to R J Balaji and team. Broker samiyarhalukku oru savukkadi. The most needed moral to our present society. Applauds to balaji to film this movie bravely. Most importantly we can sit and watch with our family and enjoy. We should have faith in God not on the samiyar. This review purposefully underrating the movie.

 • kumar -

  சூப்பரோ சூப்பர்

 • kumar -

  சூப்பர்

 • kumar -

  படம் சூப்பரோ சூப்பர்

 • K.suthakar - Dindigul ,இந்தியா

  Sadguru samiyara parthu bayama

 • K.suthakar - Dindigul ,இந்தியா

  Sadreview is worst

 • ஆனந்த ராஜ் -

  படம் சூப்பராக இருக்கிறது உங்களது விமர்சனம் தான் சுமார்

 • Muthu -

  இங்கே உள்ள விமர்சனம் போல் இல்லாமல் படம் நன்றாக விருவிருப்பாக உள்ளது,வாழ்த்துக்கள் பாலாஜி

  • CHANDRA KUMAR -

   நெத்தியடி படம். தினமலர் விமர்சனம் இங்கே உள்ள சாமியார் சிலரை பாதுகாக்கும் முயற்சி

  • CHANDRA KUMAR -

   movie is great. Review is because of Samiyars fear. I m a hindu. directly worshipping my hindu gods. no need of broker samiyars

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement