dinamalar telegram
Advertisement

வானமே எல்லை!

Share

'நேஹாஸ் சில்க் பேக்ஸ் - 2005ம் ஆண்டு, திருநெல்வேலி பாளையங்கோட்டையில தொடங்கினது இந்த பயணம். இப்போ, சென்னையிலேயும் வெற்றிகரமா கால் பதிச்சாச்சு!' - 'வானமே எல்லை' என, சிறகு விரித்திருக்கிறார், 59 வயது ரனித்தா.

பிரத்யேகமான முதல் ரக பட்டு நுாலில் தயாராகும், 'டிசைனர் சில்க் கைப்பை'களே, நேஹாஸ் பேக்ஸின் அடையாளம். இக்கைப்பைகள், 'சில்க் மார்க்' தரச்சான்றிதழ் பெற்றிருப்பது சிறப்பு. வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப தோல், மரம், பிரம்பு, நார் கொண்டு கைப்பிடிகள் அமைத்து தருகின்றனர்.
விலை, பராமரிப்பு பற்றி யோசிப்பவர்களுக்கென, பட்டு போலவே பளபளக்கும், 'ஸ்பன் சில்க்' பைகளும் இங்குண்டு.
இவற்றோடு... பர்ஸ், க்ளட்சஸ், மொபைல் பவுச், ஜூவல் பவுச் உள்ளிட்டவை, 80 ரூபாயில் துவங்கி, 2,000 ரூபாய் வரையில் இங்கிருக்கின்றன. வாடிக்கையாளர்கள் விரும்பும் பொருட்களில், 'எம்ப்ராய்டரி' செய்து தருவது இவர்களின் தனித்துவம்.
பொருளோட தரம் தான் வெற்றிக்கான மந்திரம்!

இங்கிருக்கும் சிறப்பு பொருள்
ஐந்து கிலோ எடை தாங்கும், 'ஸ்பன் சில்க்' கைப்பை - 350 ரூபாய்
நேஹாஸ் சில்க் பேக்ஸ், ஆழ்வார்பேட்டை, சென்னை.
94433 48386

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement