dinamalar telegram
Advertisement

ரவுத்திர வீணை!

Share

தமிழக முதல்வர் பழனிசாமிக்கு,

ஒன்பதாம் வகுப்புல பொண்ணு, நான்காம் வகுப்புல பையன் - இவங்களோட படிப்பு செலவு, வீட்டு வாடகை, புதுசா வாங்கியிருக்கிற லோடு ஆட்டோவுக்கான கடன்... எல்லாமும், இனி என் பொறுப்பு. ஏன்னா, என் கணவர் இப்போ உயிரோட இல்லை.
அவர் மரணத்துக்கு காரணமான மின்கம்பம் சேதமாகி இருக்குதுன்னும், அடிக்கடி தீப்பொறி பறக்குதுன்னும் எங்க பகுதி மக்கள் பல தடவை புகார் கொடுத்தும், உங்க மின்வாரியம் அதை பொருட்டா மதிக்கலை.
இப்போ கூட, 'லாரி இடிச்சதுனால தான் மின்கம்பம் சேதமாயிருக்கு'ன்னு, மின்கம்பம் சேதமானதுக்கான காரணத்தை சொல்ற அமைச்சர், 'எப்படியிருந்தாலும் நாங்க அந்த மின்கம்பத்தை மாத்தியிருக்கணும்; அதை செய்யாதது தப்பு தான்'னு உண்மையை சொல்ல மாட்டேங்குறார்!
என் புருஷன் உயிர் போயிருச்சுன்னு தெரிஞ்சதும், சிட்லபாக்கம் துணை மின்நிலைய ஊழியர்கள் உடனடியா வந்து புது மின்கம்பத்தை அமைக்கிறாங்க.
ஏழாவது ஊதிய கமிஷன்படி, மிக மிக குறைவான ஊதியம் வாங்குற அரசு ஊழியர்கள், தங்களோட கடமையைச் செய்ய நாங்க உயிரை விடணும்; அப்படித்தானே?
சரி... ஆதரவில்லாம நிற்கிற எனக்கு, நீங்க அறிவிச்சிருக்கிற 3 லட்ச ரூபாய் நிவாரணம், நியாயமான தொகையான்னு மனசாட்சியோட சொல்லுங்க!
- மின்கம்பம் சாய்ந்து பலியான சேதுராஜின் மனைவி சங்கரேஸ்வரி, சிட்லபாக்கம், காஞ்சிபுரம்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement