Advertisement

மாண்புமிகு மாணவி!

'சிறு வயதிலேயே கேட்கும், பேசும் திறனை இழந்த இவர், மதுரை அவ்வை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் 10ம் வகுப்பு மாணவி!'
- இது, ஜெர்லின் அனிகாவின் சராசரி அடையாளம்.

'சமீபத்தில் தைவானில் நடைபெற்ற, உலக காது கேளாதோர் பாட்மின்டன் சாம்பியன்ஷிப் - ஜூனியரில், ஒற்றையர், இரட்டையர், கலப்பு இரட்டையர் பிரிவுகளில் பதக்கம் வென்றவர்!' - இது, அவரது சிறப்பு அடையாளம்!
'எட்டு வயசுலேயே களத்துல இறங்கிட்டேன்னாலும், இறகுப்பந்து எழுப்புற ஒலியை உணர முடியாதது, புள்ளிகளை கணிக்க தெரியாததுன்னு நிறைய தோல்விகள்; ஆனாலும், நான் துவண்டு போகலை. வரைபடம் மூலமா விளையாட்டோட நுணுக்கங்களை கத்துக்கிட்டு போராடி மேல வந்தேன்!' - ஜெர்லினின் சைகையை, நமக்கு மொழி பெயர்த்தார் பயிற்சியாளர்.
'வாழ்க்கையில என்ன நடந்தாலும் மனசை அமைதியா வைச்சுக்கணுங்கிற தெளிவு; 'தோல்வியில ஒடிஞ்சு போயிடக் கூடாதே தவிர, கண்டிப்பா வருந்தணும்'ங்கிற மாற்று சிந்தனை; 'வெற்றியை தலையில ஏத்திக்காம சுலபமா கடந்து போயிடணும்'ங்கிற பக்குவம்... இதுதான் ஜெர்லின்' என்கிறது வகுப்பறை.

எங்கள் ஜெர்லின்!
'சிறப்பு குழந்தைகள் எல்லாருக்கும் வழிகாட்டி... ஜெர்லின்; இவளால், எங்கள் பள்ளிக்கு பெருமை!'
- வே.பூங்காவனம், தலைமை ஆசிரியை.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement