பொது செய்தி

தமிழ்நாடு

நெல் சாகுபடியில் குலை நோய்: விவசாயிகளுக்கு அறிவுரை

Added : அக் 05, 2010
Advertisement

உடுமலை: நெல் சாகுபடியில் பரவி வரும் குலை நோய் தாக்குதலை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து வேளாண்துறையினர் விவசாயிகளுக்கு அட்வைஸ் வழங்கியுள்ளனர்.


உடுமலை வேளாண் உதவி இயக்குனர் சைலஸ் அறிக்கை:உடுமலை வட்டாரத்தில் 240 எக்டர் பரப்பில், நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது நிலவி வரும் பருவநிலை காரணமாக குலை நோய் தாக்குதல் சில இடங்களில் காணப்படுகிறது. குறைவான இரவு வெப்ப நிலை, அதிகப்படியான ஈரப்பதம், மேகமூட்டத்துடன் லேசான தூறல், அதிக தழைச்சத்து, முந்தைய பருவத்தின் பயிர் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாவிட்டால், குலை நோய் தாக்கும்.நெல் விதைகளை நாற்றங்கால் தயாரிப்பதற்கு முன்பு சூடோமோனஸ் ப்ளுரொசன்ஸ் என்ற உயர் பூஞ்சாண கொல்லியுடன் 10 கிராம் ஒரு கிலோ விதைக்கு என விதை நேர்த்தி செய்ய வேண்டும். கூடுதலாக தழைச்சத்து இடுதலை தவிர்த்து, குலை நோய் தாக்காத ரகங்களை தேர்வு செய்ய வேண்டும்.அதிகப்படியான தண்ணீர் வயலில் தேங்குவதை தவிர்த்து, வரப்பில் காணப்படும் களைச்செடிகளை அப்புறப்படுத்தினால், நோய் வராமல் தவிர்க்கலாம். பைரிகுளோரியா ஒரைசா என்ற பூசாண நோய் கிருமி இலைகளை தாக்கும்.தாக்கப்பட்ட இடத்தில் சாம்பல் நிறப்புள்ளிகள் பழுப்பு நிற எல்லை கோடுகளுடன் வைர வடிவத்தில் அல்லது உருளை வடிவத்தில் காணப்படும். புள்ளிகள் ஒன்று சேர்ந்து தீ பட்டது போல் அறிகுறிகளை ஏற்படுத்தும்.கதிர்களில், மணிகளிலும் இது போன்ற தாக்குதலை ஏற்படுத்தும். இதனால், நெல் மணிகள் பதர்களாக மாறுகின்றன. பயிரின் தண்டுப்பகுதிகளிலும் பழுப்பு நிறப்புள்ளிகள் காணப்படும். தாக்குதல் தென்பட்டதும், கார்டென்டிசம் 250 கிராம் ஒரு எக்டருக்கு என்ற அளவில் தெளிக்க வேண்டும்.தாக்குதலின் தன்மை தீவிரமாக காணப்பட்டால், ட்ரைசைக்ளோசால் 75 என்ற மருந்தை ஒரு எக்டருக்கு 500 கிராம் தெளிக்கலாம். மருந்துகளை காலை அல்லது மாலை வேளைகளில் தெளிக்க வேண்டும். மழை பெய்யும் நேரத்தில் மருந்து தெளிக்க கூடாது என வேளாண்மை இணை இயக்குனர் முத்துசாமி அறிவுரை அடிப்படையில் வேளாண் உதவி இயக்குனர் சைலஸ் தெரிவித்துள்ளார்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X