சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெற்ற மகளை கற்பழித்து கர்ப்பமாக்கிய கொடூரன் : கர்ப்பம் கலையாததால் கொலை செய்த கொடுமை

Added : மே 31, 2010 | கருத்துகள் (50)
Share
Advertisement
பெற்ற மகள், கற்பழிப்பு, கர்ப்பம், கொலை, rape, pregnant, kill

நாகர்கோவில் : பெற்ற மகளை கற்பழித்ததுடன், அதனால் உருவான கர்ப்பத்தை மறைக்க கொலை செய்த கொடூர தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.


கன்னியாகுமரி மாவட்டம், அருமனை பகுதியை சேர்ந்தவர் புரூஸ்லெட். இவர் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி. இவரது மகள் ஷெர்லிஜாஸ்மின் (18). பிளஸ்டூ படித்து வந்தார். ஷெர்லியின் தாயார் கேன்சர் நோயில் இறந்து விட்டார். இதை தொடர்ந்து ஐடா என்ற பெண்ணை புரூஸ்லெட் இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் , கடந்த 29ம் தேதி காலை புரூஸ்லெட்டும், ஐடாவும் மகளை வீட்டில் விட்டுவிட்டு உறவினர் வீட்டுக்கு சென்றனர். மாலையில் திரும்பி வந்த போது, வீட்டின் பின்பக்க தண்ணீர் தொட்டியில் ஜாஸ்மின் இறந்து கிடந்தார். அவரது கழுத்து மற்றும் காதில் கிடந்த நகைகள், பீரோவில் இருந்த நகைகள் என 14 சவரன் நகைகள் திருட்டு போனது. இது பற்றி அருமனை போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். சம்பவம் நடந்த வீட்டில் மிளகாய்பொடி தூவப்பட்டிருந்தது. இதனால் கொள்ளையர்கள் பக்கம் போலீசாரை திசை திருப்ப முயற்சி நடைபெற்றது. கைரேகை அடிப்படையில் போலீசார், புரூஸ்லெட்டை கைது செய்தனர். "முறைப்படி' விசாரித்த போது அவர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.


திசை திருப்ப முயற்சி: மகளுடன் உடல் உறவு கொள்ள முயன்று நடக்காததால், மயக்கமடைய செய்து உடல் உறவு கொண்டதால், அவர் கர்ப்பம் ஆகியுள்ளார். மாத்திரை கொடுத்தும் கர்ப்பம் கலையாததால் கொலை செய்ய முடிவு செய்ததையும் அவர் ஒப்புக்கொண்டார். சம்பவத்தன்று 2வது மனைவியை நாகர்கோவிலுக்கு அனுப்பி விட்டு, வீட்டுக்கு வந்த புரூஸ்லெட், மகளை கொலை செய்து தண்ணீர் தொட்டியில் போட்டுள்ளார். போலீசார் கவனத்தை திசை திருப்ப மிளகாய் பொடியை தூவி விட்டு நகைகளையும் எடுத்து சென்றுள்ளார். அவர் கொடுத்த தகவலின் பேரில் வீட்டில் ஒரு இடத்தில் ஷூவில் மறைத்து வைத்திருந்த நகைகளை போலீசார் கைப்பற்றினர். புரூஸ்லெட் மீது அப்பகுதி மக்கள் ஆத்திரத்தில் உள்ளனர். அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க அப்பகுதியில், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
avs - madurai,இந்தியா
02-ஜூன்-201000:11:30 IST Report Abuse
 avs இவனயும் காப்பாத்த ஒரு ஈனப்பிறவி வக்கீல் வருவான். கேட்டால் தொழில் தர்மம் என்பான். போங்கடா உங்க சட்டமும் நீங்கலும்.......
Rate this:
Cancel
Rajamohamed - Riyadh,சவுதி அரேபியா
02-ஜூன்-201000:08:07 IST Report Abuse
 Rajamohamed சுத்தி உள்ள மக்கள் தயவு செய்து ,கல்லால் அடிச்சு கொல்லுங்கள் ப்ளீஸ் .இந்த மாதிரி காம பேய உயிரோடு கொளுத்தினா தான்,அந்த பிஞ்சு குழந்தையோட ஆத்மா சாந்தி அடையும்.ச்சே ரெம்ப அவமானமா இருக்கு, நம்ம தமிழ்நாட்டுக்குள்ள .இவனோட இந்த செய்தி கடசியா இருக்கணும்.படிக்க படிக்க வேதனையா இருக்கு.
Rate this:
Cancel
sriya - Vinna,ஆஸ்திரியா
01-ஜூன்-201023:22:41 IST Report Abuse
 sriya thundu thundaka veddanum entha naayai
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X