சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் : மர்ம கும்பலால் வெட்டிக் கொலை

Updated : அக் 09, 2010 | Added : அக் 07, 2010 | கருத்துகள் (98)
Advertisement

புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே அ.தி.மு.க., முன்னாள் அமைச்சரை நேற்றிரவு மர்ம கும்பல் சரமாரியாக வெட்டியது.  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தொகுதி அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., வெங்கடாசலம். இவர், அ.தி.மு.க., ஆட்சியின் போது, சிறிது காலம் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்தார். தற்போது, ஜெ., பேரவை மண்டல செயலராக பணியாற்றி வந்தார்.இவரது சொந்த ஊர் ஆலங்குடி அடுத்த வடகாடாகும். நேற்றிரவு வழக்கம் போல், கடை வீதி சென்று விட்டு வடகாட்டிலுள்ள வீடுக்கு திரும்பியுள்ளார். இரவு 8.30 மணியளவில், வீட்டிற்கு வெளியே நாற்காலியில் உட்கார்ந்து மனைவி, குழந்தைகள், உறவினர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.அப்போது, ஆறு பேருக்கும் மேற்பட்ட கும்பல் அரிவாள், பட்டாக்கத்தி, உருட்டுக்கட்டை போன்ற பயங்கர ஆயுதங்களுடன் அடையாளம் தெரியாத காரில் திடீரென வந்து இறங்கினர்.சற்றும் எதிர்பார்க்காத வகையில் வெங்கடாசலத்தை சுற்றி வளைத்த கும்பல் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியது. அரிவாளால் சரமாரியாக வெட்டியதில், தலை, கழுத்து, மார்பு, கையில் பலத்த காயம் ஏற்பட்டது.


உடனடியாக உறவினர்கள் மற்றும் மக்கள் ஒன்று சேர்ந்து புதுக்கோட்டை டீம் ஸ்பெஷாலிட்டி என்ற மருத்துவமனையில் வெங்கடாசலத்தை அனுமதித்தனர்.அங்கு பரிசோதித்த டாக்டர்கள், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதால், அரசு மருத்துவமனை கொண்டு செல்லுமாறு கூறியுள்ளனர். புதுகை அரசு மருத்துவமனைக்கு இரவு 9.20 மணிக்கு வெங்கடாசலம் கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிதாபமாக உயிரிழந்தார்.இத்தகவல் வடகாடு முழுவதும் பரவியதால், வெங்கடாசலம் ஆதரவாளர்கள் மற்றும் கிராமத்தினர் ஒன்று சேர்ந்து கண்ணில் பட்ட வாகனங்களை அடித்து நொறுக்கியதுடன் தீ வைத்து கொளுத்த துவங்கினர்.


இதில், ஏராளமான டூவீலர் மற்றும் போலீஸ் ஜீப், லாரி, பஸ்களும் கொளுத்தப்பட்டன. சாலை முழுவதும் மரங்களை வெட்டிப் போட்டதால் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. தகவலறிந்த புதுக்கோட்டை எஸ்.பி., முத்துசாமி  சம்பவ இடத்துக்கு விரைந்தார். நிலைமைக் கட்டுக்குள் கொண்டு வரமுடியாததால், அதிரடிப்படை, அதிவிரைவுப்படை வரவழைக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டுள்ளனர்.பாதுகாப்பு பணிக்கு தஞ்சை, திருச்சி மாவட்டங்களில் இருந்தும் போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். வெங்கடாசலம் உடல் வைக்கப்பட்டுள்ள புதுகை அரசு மருத்துவமனையில் ஏராளமானோர் குவிந்ததால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 


Advertisement
வாசகர் கருத்து (98)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
shankar dubai - pudukkottai,இந்தியா
10-அக்-201002:04:32 IST Report Abuse
shankar dubai good person diead what a do?police ans witing for pudukkottai
Rate this:
Share this comment
Cancel
sankar - singaporeபுதுக்கோட்டைகொதக்கொட்டை,இந்தியா
08-அக்-201023:43:44 IST Report Abuse
sankar என்ன கொடுமை இதெல்லாம் .........
Rate this:
Share this comment
Cancel
sankar - புதுக்கோட்டை...kothakkottai,இந்தியா
08-அக்-201023:40:30 IST Report Abuse
sankar நல்ல மனிதர் .....ஆழ்ந்த வருத்தங்கள் தெரிவித்து கொள்கிறோம் .........
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X