சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கன்னியாஸ்திரிக்குமருத்துவ பரிசோதனை

Added : அக் 13, 2010 | கருத்துகள் (1)
Advertisement

திருச்சி:திருச்சி தூய வளனார் கல்லூரி முதல்வர் மீது கற்பழிப்பு புகார் கூறிய கன்னியாஸ்திரிக்கு மருத்துவ பரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.திருச்சி தூய வளனார் கல்லூரி முதல்வர் ராஜரத்தினம், தன்னை கற்பழித்துவிட்டதாக அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அடுத்துள்ள தஞ்சை சாவடியைச் சேர்ந்த ப்ளாரன்ஸ் மேரி (28) என்ற கன்னியாஸ்திரி நேற்று முன்தினம் இரவு கோட்டை  அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.


புகாரின் பேரில் தூய வளனார் கல்லூரி முதல்வர் ராஜரத்தினம் மீது கற்பழிப்பு மற்றும் மிரட்டுதல் ஆகிய பிரிவுகளிலும், அவருக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி, பாதிரியார்கள் தேவதாஸ், சேவியர் பிரான்சிஸ், சேவியர் மீது மிரட்டல் விடுத்தாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.புகார் கொடுத்த கன்னியாஸ்திரியை கோட்டை மகளிர் போலீசார் நேற்று மாலை, திருச்சி முதலாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அந்த பெண்ணிடம் புகாரின் தன்மை குறித்து விசாரித்த நீதிபதி ஆப்ராகம் லிங்கன், மருத்துவப் பரிசோதனைக்கு சம்மதமா என்று விசாரித்தார். அதற்கு, கன்னியாஸ்திரி ப்ளாரன்ஸ் மேரி சம்மதம் தெரிவித்துள்ளார்.


இதையடுத்து, கன்னியாஸ்திரி கன்னித்தன்மை உள்ளவரா அல்லது இழந்தவரா, கருக்கலைப்பு செய்யப்பட்டவரா என்பது குறித்து மருத்துவ பரிசோதனை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.நீதிமன்றத்தின் உத்தரவுப்படி இன்று காலை திருச்சி மிளகுபாறையில் உள்ள கி.ஆ.பெ.விஸ்வநாதம் அரசு மருத்துவக்கல்லூரியில் மருத்துவ சோதனை நடக்கும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. 


Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
paul - chennai,இந்தியா
13-அக்-201010:05:11 IST Report Abuse
paul One should accept the boldness of that sister.Do not involve low cast,medium cast,higher cast ,cancer theory of india in this case
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X