சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மூதாட்டியை மதமாற்றம் செய்து ரூ.2 கோடி சொத்து சுருட்டல்

Added : அக் 13, 2010 | கருத்துகள் (1)
Share
Advertisement

ஓசூர்:ஓசூரில், மூதாட்டியை மதமாற்றம் செய்து, இரண்டு கோடி ரூபாய் சொத்துக்களை கிறிஸ்தவ மதபோதகர், தன் பெயரில் எழுதி வாங்கினார். ஆத்திரமடைந்த இந்து அமைப்பினர், ஆசிரமத்தை முற்றுகையிட்டனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சாந்தி நகரை சேர்ந்த முனுசாமியின் மனைவி லட்சுமியம்மா(85). இவருக்கு குழந்தை இல்லாததால், அண்ணன் மகள் சரஸ்வதியை (45) சிறு வயதில் தத்தெடுத்து வளர்த்தார்.சரஸ்வதிக்கு திருமணமாகி, நான்கு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.


லட்சுமியம்மாவை, சரஸ்வதி குடும்பத்தினர் பராமரித்து வந்தனர். லட்சுமியம்மாவுக்கு சாந்திநகரில் எட்டு சென்ட் நிலம், 16 வீடுகள் மற்றும் ஒரு காலிமனை, நகை, வங்கி சேமிப்பு, தபால் அலுவலக சேமிப்பு என, இரண்டு கோடி ரூபாய் சொத்து உள்ளது. கடந்த இரு ஆண்டாக சரஸ்வதி குடும்பத்தினர், லட்சுமியம்மாவிடம் சொத்துகளை எழுதி தருமாறு வற்புறுத்தியும், அவர் மறுத்தார். இதனால், சரஸ்வதி மற்றும் அவரது மகன் அரீஷ் மற்றும் மகள் பாக்கியலட்சுமி ஆகியோர், லட்சுமியம்மாவை கொடுமைப்படுத்தினர்.இரு வாரத்துக்கு முன் மத்திகிரி கூட்டுரோட்டில் உள்ள கிறிஸ்தவ அமைப்பிற்கு சொந்தமான ஆனந்த் ஆசிரமம் சென்ற லட்சுமியம்மா, உறவினர்கள் தன்னை கொடுமைப்படுத்துவதாக கூறினார்.ஆசிரம தலைவர் பாஸ்டர் சாமுவேல் கோயில்பிள்ளை, லட்சுமியம்மாவை மூளை சலவை செய்து, கிறிஸ்தவ அமைப்புக்கு மதமாற்றம் செய்தார்.


பாஸ்டரின் ஆதரவால் ஈர்க்கப்பட்ட லட்சுமியம்மா, தன்னுடைய சொத்துகளை ஆசிரமத்திற்கு எழுதி கொடுத்தார். பாஸ்டர் சாமுவேல் கோயில்பிள்ளை சொத்துகளை ஆசிரமம் பெயரில் எழுதி வாங்காமல், லட்சுமியம்மாவை ஏமாற்றி தன்னுடைய பெயருக்கு விற்பனை செய்ததாக எழுதி வாங்கினார்.இதற்கிடையில், லட்சுமியம்மா ஆசிரமத்தில் இருப்பதை அறிந்த வளர்ப்பு மகள் சரஸ்வதி மற்றும் குடும்பத்தினர், அவரை சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து சென்றனர். அவரிடம் மீண்டும் சொத்தை எழுதி தருமாறு கேட்டதற்கு,  சொத்துக்களை ஆசிரமத்துக்கு எழுதி வைத்து விட்டதாக கூறினார்.


ஆத்திரமடைந்த சரஸ்வதி குடும்பத்தினர், அவரை தாக்கினர். காயமடைந்த லட்சுமியம்மா, இரவு வீட்டில் இருந்து தப்பி, மத்திகிரி ஆசிரமத்துக்கு சென்றார்.
சரஸ்வதி குடும்பத்தினர், பாரதிய ஜனதா கட்சி முன்னாள் மாநில பொருளாளர் நரேந்திரன், இந்து முன்னணி நகர தலைவர் முருகன் ஆகியோர் தலைமையில், 60க்கும் மேற்பட்டோர் நேற்று காலை, ஆசிரமத்தை முற்றுகையிட்டனர்.ஆசிரம நிர்வாகிகளிடம் எழுதி கொடுத்த பத்திரங்களை வாங்கி பார்த்த போது, பாஸ்டர் சாமுவேல் கோயில்பிள்ளை, மூதாட்டியை ஏமாற்றி சொத்துக்களை அவர் பெயருக்கு எழுதி வாங்கியது தெரிந்தது.


ஆவேசமடைந்த இந்து அமைப்பினர், ஆசிரம நிர்வாகிகளுடன் கடும் வாக்குவாதம் செய்தனர். தகவலறிந்த மத்திகிரி போலீசார் அங்கு வந்து, இந்து அமைப்பினரை சமாதானம் செய்து, பாஸ்டர் சாமுவேல் கோயில்பிள்ளை மற்றும் ஆசிரம நிர்வாகிகளை டவுன் ஸ்டேஷனுக்கு வரவழைத்து,  பேச்சு வார்த்தை நடத்தினர்.ஆசிரம நிர்வாகி எழுதி வாங்கிய சொத்துகளை, மீண்டும் லட்சுமியம்மா பெயருக்கு எழுதி கொடுப்பது என முடிவு செய்யப்பட்டது. 


Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VIJAY - துபாய்,ஐக்கிய அரபு நாடுகள்
13-அக்-201010:24:09 IST Report Abuse
VIJAY GOVERNMENT HAS TO TAKE IMMEDIATE ACTION ON CONVERTING ONE RELIGION OTHER RELIGION THIS VERY SERIOUS ISSUE CHEATING POOR AND UNEDUCATED AND OLD PEOPLE IT IS SERIOUS THREAT TO INTEGRITY OF OUR COUNTRY
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X