புதுச்சேரி:காப்பகத்திலிருந்த சிறுமிகளை கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் சிறையில் அடைக்கப்பட்டார்.புதுச்சேரி துத்திப்பட்டு கிராமத்தில் அனாதை குழந்தைகள் காப்பகம் உள்ளது. இக் காப்பகத்தில் தங்கியிருந்த சுமதி(10), அனுஷா(8), தமிழ்(10) ஆகிய மூன்று சிறுமிகள் கடந்த 5ம் தேதி திடீரென காணாமல் @பாயினர். சேதராப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.காப்பகத்தில் பணியாற்றிய திண்டிவனம் கிடங்கல் பகுதியை சேர்ந்த லட்சுமியை (23) என்பவரையும் காணவில்லை. சிறுமிகளை லட்சுமி கடத்திச் சென்றிருக்கலாம் என போலீசார் கருதினர். இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர்கள் முருகன், ஆடலரசன் ஆகியோர் நேற்றுமுன்தினம் திண்டிவனத்திற்கு விரைந்தனர்.
திண்டிவனம் கிடங்கல்(1) பகுதியில், சிறுமிகளை கடத்தி வைத்திருந்த லட்சுமியை கைது செய்தனர். லட்சுமி மற்றும் மூன்று சிறுமிகளும் நேற்று காலை சேதராப்பட்டு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.காப்பகத்திலிருந்த சிறுமிகளை கடத்திச் சென்ற லட்சுமி, திருப்பதிக்கு அழைத்துச் சென்று, சிறுமிகளை பிச்சை எடுக்க வைத்துள்ளார். இதன் மூலம் போதுமான பணம் கிடைக்காததால் திரும்பி திண்டிவனம் வந்ததாக, விŒõரணையில் லட்சுமி தெரிவித்துள்ளார்.லட்சுமியை @நற்று மாலை முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் காவலில் வைக்குமாறும், சிறுமியர் மூவரையும் காப்பகத்தில் ஒப்படைக்குமாறும் மாஜிஸ்திரேட் தாமோதரன் உத்தரவிட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE