தமிழகத்தில் இருந்து 460 பேர் ஹஜ் புனித பயணம்| Dinamalar

தமிழ்நாடு

தமிழகத்தில் இருந்து 460 பேர் ஹஜ் புனித பயணம்

Added : அக் 14, 2010 | கருத்துகள் (2)

சென்னை: தமிழகத்தில் இருந்து முதல் குழுவைச் சேர்ந்த 460 ஹஜ் பயணிகள், சென்னையிலிருந்து நேற்றிரவு விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றனர். ஹஜ் பயணம் மேற்கொள்ளும் முதல் குழுவை, துணை முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து பேசி வழியனுப்பி வைத்தார். தமிழகத்தில் இருந்து ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்வோரில், முதல் குழுவைச் சேர்ந்த 460 பேர் நேற்றிரவு சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்றனர். ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும், இவர்களை துணை முதல்வர் ஸ்டாலின், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மைதீன் கான் மற்றும் இந்திய ஹஜ் கமிட்டி தலைமைச் செயல் அலுவலர் ஜாகீர் உசேன் ஆகியோர் நேரில் சந்தித்து பேசினர். ஹஜ் கமிட்டி தலைவர் அபுபக்கர் கூறும்போது," இது வரை இல்லாத அளவிற்கு, தமிழகத்தில் இருந்து 5,022 பேர் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்கின்றனர்' என்றார்.


 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X