பொது செய்தி

இந்தியா

கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் காமன்வெல்த் போட்டி நிறைவு

Updated : அக் 14, 2010 | Added : அக் 14, 2010 | கருத்துகள் (2)
Share
Advertisement

புதுடில்லி : கடந்த 12 நாட்களாக நடந்து வந்த 19வது காமன்வெல்த் போட்டி, கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் நிறைவு பெற்றது. புதுடில்லி ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடந்த கண்கவர் நிறைவு விழாவில்,  முதலில் விளையாட்டு போட்டிகளின் ஆரம்பம் குறித்த கலைநிகழ்ச்சியும், பின்னர் மியூசிக் ஆப் யுனிவர்ஸ் எனும் இசை நிகழ்ச்சியும் நடந்தது. இதில் ஏராளமான இசைக்கலைஞர்கள் பங்குகொண்டனர். தொடர்ந்து இந்திய ராணுவத்தின் இசைக்கலைஞர்கள் பங்கு கொண்ட கலைநிகழ்ச்சியும், டில்லி பள்ளிக்குழந்தைகள் பங்குகொண்ட வந்தேமாதரம் எனும் இசை நிகழ்ச்சியும் நடந்தது. இதன் பின்னர், காமன்வெல்த் கொடி இறக்கப்பட்டு, 2014ல் காமன்வெல்த் போட்டியை நடத்தும் ஸ்காட்லாந்து ஒருங்கிணைப்பு குழுவிடம் வழங்கப்பட்டது. தொடர்ந்து லேசர் ஷோ, இசை நிகழ்ச்சிகள் தொடர, 2010 டில்லி காமன்வெல்த் போட்டி, வாணவேடிக்கைகளுடன் நிறை‌வடைந்தது. நிறைவு விழாவில், துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங், காங்., தலைவர் சோனியா, ராகுல் மற்றும் சிறப்பு விருந்தினராக இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷே உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கருவண்டு - காந்திபுரம்கோவை,இந்தியா
14-அக்-201018:57:11 IST Report Abuse
கருவண்டு எல்லாம் சந்தோஷம். இந்திய வுக்கு நல் வாழ்த்துக்கள். இந்திய குடிமகனாய்,பெருமையே. ஆனால் இதில் தமிழர்களை கொன்று குவித்த ராஜ பாக்ஷே விருந்தினராக கலந்து கொள்ள நமது இந்திய அரசு செய்தது தூர் அதிஷ்டமானது...இது ஒரு சிறு வடுவாக இந்த இனிய நிறைவு நாளில் இந்திய பிரஜியை தமிழ் உணர்வாளனாய் தெரிவித்துக்கொள்கிறேன். வாழ்த்துக்கள் என் தாய் மண் இந்தியா...
Rate this:
Cancel
குமார் ராஜசெகே - CHENNAI,இந்தியா
14-அக்-201018:22:44 IST Report Abuse
குமார் ராஜசெகே ஹலோ இந்தியன்ஸ், வி ஆர் ப்ரெளட் டு பி இந்தியன்ஸ் .. வித் ஆல் டிஸ்டர்பில் வி சக்சஸ்புல்லி கம்ப்லீட்டட் தி காமன்வெல்த் கேம்ஸ்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X