460 ஹஜ் புனித யாத்திரீகர்களுடன் விமானம் புறப்பட்டது

Added : அக் 14, 2010 | கருத்துகள் (16) | |
Advertisement
சென்னை: தமிழகத்திலிருந்து ஹஜ் புனித யாத்திரைக்கு 460 பேர் சென்னை மீனம்பாக்கம், அண்ணா பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றனர். அவர்களை, துணை முதல்வர் ஸ்டாலின்,  கனிமொழி எம்.பி., ஆகியோர் வழியனுப்பி வைத்தனர். இந்த ஆண்டு தமிழ்நாடு ஹஜ் கமிட்டி சார்பில் தமிழகம், புதுச்சேரி, அந்தமான் ஆகிய இடங்களிலிருந்து 5,022 பேர் ஹஜ் யாத்திரைக்கு தேர்வு
460 ஹஜ் புனித யாத்திரீகர்களுடன் விமானம் புறப்பட்டது

சென்னை: தமிழகத்திலிருந்து ஹஜ் புனித யாத்திரைக்கு 460 பேர் சென்னை மீனம்பாக்கம், அண்ணா பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றனர். அவர்களை, துணை முதல்வர் ஸ்டாலின்,  கனிமொழி எம்.பி., ஆகியோர் வழியனுப்பி வைத்தனர். இந்த ஆண்டு தமிழ்நாடு ஹஜ் கமிட்டி சார்பில் தமிழகம், புதுச்சேரி, அந்தமான் ஆகிய இடங்களிலிருந்து 5,022 பேர் ஹஜ் யாத்திரைக்கு தேர்வு செய்யப்பட்டனர். அதில், 460 பேர் நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு மணிக்கு சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து, விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றனர். முன்னதாக, ஹஜ் புனித யாத்திரைக்கு செல்பவர்களை விமான நிலையத்தில் தமிழக துணை முதல்வர் ஸ்டாலின், கனிமொழி எம்.பி.,  ஆகியோர் சந்தித்து, சால்வைகளை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது, துணை முதல்வர் ஸ்டாலின் பேசுகையில்,"தமிழகத்தில் இஸ்லாமியர்கள், மக்கள் தொகை அடிப்படையில் 2,700 பேர் புனித ஹஜ் யாத்திரைக்கு சென்றனர். இந்த பட்டியலை அதிகப்படுத்தி தர வேண்டும் என மத்திய அரசுக்கு முதல்வர் கருணாநிதி தொடர்ந்து வலியுறுத்தியதன் காரணமாக, தமிழக வரலாற்றில் இல்லாத வகையில் 4,241 பேர் செல்கின்றனர்,' என்றார். இந்நிகழ்ச்சியில் விளையாட்டுத்துறை அமைச்சர் மைதீன்கான், இந்திய ஹஜ் கமிட்டி துணைத் தலைவரும், தமிழக ஹஜ் கமிட்டி தலைவருமான அபூபக்கர், இந்திய குழு செயல் அலுவலர்  ஜாகீர்உசைன், தமிழக அரசு செயலர் அலாவுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
srn - shj,இந்தியா
16-அக்-201000:46:06 IST Report Abuse
srn இந்து என்பது மதசார்புள்ள மதம். முஸ்லீம் என்பது மதசார்பற்ற மதம். எனவேதான் அவர்களுக்கு எல்லா விதமான சலுகையும்.
Rate this:
Cancel
தக்பீர் அலி - துபாய்,ஐக்கிய அரபு நாடுகள்
16-அக்-201000:29:00 IST Report Abuse
தக்பீர் அலி வாசகர்கள் தவறாக இதை புரிந்து கொள்கிறார்கள். இலவசமாக புனித ஹஜ் பயணம் போவது ஒன்றும் ஹஜ் யாத்திரை முழுமை பெறாது. அவரவர் சொந்த செலவில் தான் போக வேண்டும். இங்கு யாரும் அரசு செலவில் போவதற்கு போட்டி போடவில்லை. யாரும் போக விரும்பவும் இல்லை. அப்படி ஒன்றும் அரசு ஒரு செலவு பண்ணுவதும் இல்லை.
Rate this:
Cancel
Abdoul carime - Frankfurt,ஜெர்மனி
15-அக்-201022:12:05 IST Report Abuse
Abdoul carime We wish to everybody to partipate the HolyHaj and pray to Allah for all...... best regards
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X