பணபலத்தால் எடியூரப்பாவைஅகற்ற சதி: கட்காரி புகார்

Added : அக் 14, 2010 | கருத்துகள் (1)
Share
Advertisement
பணபலத்தால் எடியூரப்பாவைஅகற்ற சதி: கட்காரி புகார்

மும்பை:""மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சியின் பண பலத்தால் தான், எடியூரப்பா அரசை கவிழ்க்க சதி செய்யப்பட்டுள்ளது,'' என பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி கூறியுள்ளார்.மும்பையில் பா.ஜ., மாநில தலைமையகத்தில் இருந்து வெப்சைட்டில் சாட்டிங் செய்த நிதின் கட்காரி மேலும் கூறியதாவது:இது போன்ற அரசு கவிழ்ப்பு அரசியலை துவக்கி வைத்தது காங்கிரஸ் கட்சியே. ஒவ்வொரு எம்.எல்.ஏ.,வும் அமைச்சராக விரும்புகின்றனர். அதற்காக எல்லாருக்கும் பதவி தர முடியுமா? கர்நாடக அரசு, மக்கள் ஆதரவு பெற்ற அரசு. அங்கு ஊழல் இல்லாத, நல்லாட்சியை கொடுக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.


ராகுலுக்கு ஆதரவான அலை என்று ஒன்றும் இல்லை. காங்கிரஸ் கட்சி, வாரிசு அரசியலை ஊக்குவிக்கும் கட்சி. ஆனால், பாரதிய ஜனதா ஜனநாயக கட்சி. ராகுலின் கவர்ச்சி பீகாரில் எடுபடுமா என்பது விரைவில் தெரியும். கடந்த ஆறு மாதங்களில் பா.ஜ.,வின் பலம் அதிகரித்துள்ளது. குஜராத் முதல் டாமன் டையூ வரை நடந்த உள்ளாட்சி தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றுள்ளது.வாஜ்பாய்க்கு உடல்நிலை சரி இல்லாததால், அவரால் கட்சிப் பணியாற்ற முடியாது. ஆனால், திறமையான பல இளம் தலைவர்கள் கட்சியில் உள்ளனர். அயோத்தி சர்ச்சை நிலம் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை அரசியலாக்க நான் விரும்பவில்லை.


அயோத்தி விவகாரம், அரசியல் ரீதியாக விவாதிக்க வேண்டிய விஷயமல்ல; அது ஒரு தேசிய பிரச்னை.வரும் 2014ல் பார்லிமென்ட் தேர்தல் நடக்கும் போது, யாரை பிரதமர் பதவிக்கான வேட்பாளராக அறிவிப்பது என்பதை கட்சி மேலிடம் முடிவு செய்யும். கட்சியில் யார் திறமையை வெளிக்காட்டுகின்றனரோ அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். திறமையான நபர்களுக்கு கட்சியில் பற்றாக்குறை இல்லை.இவ்வாறு கட்காரி கூறினார். 


Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ப. மாதவன் - சென்னை,இந்தியா
15-அக்-201007:18:29 IST Report Abuse
ப. மாதவன் நீங்கள் சொல்வது சரியே. ஆனால் ஊழல் மூலம் சம்பாதித்த பணத்தால் பா.ஜ.க.வின் வளர்ச்சியை ஒன்றும் செய்ய முடியாது. உங்கள் தலைமையின் கீழ் தாமரை மலர ஆரம்பித்து விட்டது. எங்கள் சோழங்கநல்லூர் சட்ட மன்ற பகுதியில் தொண்டர்கள் மிக ஆர்வமாக இருக்கிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X