அரசியல் செய்தி

தமிழ்நாடு

அர்ச்சகர்களுக்கு இலவச சைக்கிள் திட்டம் : முதல்வர் துவக்கி வைத்தார்

Added : அக் 18, 2010 | கருத்துகள் (30)
Advertisement
அர்ச்சகர்களுக்கு இலவச சைக்கிள் திட்டம் : முதல்வர் துவக்கி வைத்தார்

சென்னை : கோவில்களில் பணியாற்றும், 10 ஆயிரம் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு, இரண்டு கோடியே 78 லட்ச ரூபாய் செலவில், இலவச சைக்கிள்கள் வழங்கும் திட்டத்தை, முதல்வர் கருணாநிதி துவக்கி வைத்தார்.


தமிழக அரசின், ஒரு கால பூஜைத் திட்டத்தில் நிதியுதவி பெறும் கோவில்கள் பெரும்பாலும், கிராமங்களில் உள்ளன. இக்கோவில்களின் அர்ச்சகர்கள், பூசாரிகள் குறித்த நேரத்தில் கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்ய ஏதுவாக, அவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுமென, சட்டசபையில் இந்த ஆண்டு தமிழக அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பை செயல்படுத்த, தமிழகம் முழுவதும், 10 ஆயிரம் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு, இரண்டு கோடியே 78 லட்ச ரூபாய் செலவில் இலவச சைக்கிள்கள் வழங்க, முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டிருந்தார். அதன்படி, 10 ஆயிரம் சைக்கிள்கள் கொள்முதல் செய்யப்பட்டு, தமிழகம் முழுவதும் உள்ள அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு இலவசமாக வழங்கும் திட்டத்தை, முதல்வர் கருணாநிதி நேற்று துவக்கி வைத்தார். இதற்காக தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்த விழாவில், அடையாளமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்களைச் சேர்ந்த, 200 பேருக்கு, முதல்வர் கருணாநிதி, சைக்கிள்களை வழங்கி, வாழ்த்தினார்.


Advertisement


வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கசக் - போஸ்டன்,இந்தியா
19-அக்-201022:14:14 IST Report Abuse
கசக் அப்படியே ஒரு டேப் ரெகார்டர் கொடுத்து அதில் மந்திரம் எல்லாம் ஒரு காசெட்டில் போட்டு அர்ச்சகரை வீட்டிலே உக்கார வச்சு சம்பளம் குடுக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
Daniel - Singapore,சிங்கப்பூர்
19-அக்-201020:18:36 IST Report Abuse
Daniel உங்களுடைய நாற்காலி போல அனைவருக்கும் கொடுத்தால் வயதான காலத்தில் உபயோகமாக இருக்கும்? அடுத்த தேர்தல் அறிக்கையில் இந்த திட்டத்தை இணைத்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
Rate this:
Share this comment
Cancel
C Suresh - Charlotte,யூ.எஸ்.ஏ
19-அக்-201018:01:56 IST Report Abuse
C Suresh இலவசம் என்று ஊர் சொத்தை சூறையாடும் இந்த பைத்யகாரதனம் எப்போது முடியும். மக்களுக்கு நிரந்தர வசதி செய்து கொடுக்கும் திட்டம் அரசால் மக்களுக்கு தேவை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X