கோர்ட் செய்தி

தமிழ்நாடு

திருச்சி கல்லூரி முதல்வர் மீது மேலும் ஒரு வழக்கு பதிவா?

Added : அக் 21, 2010 | கருத்துகள் (3)
Share
Advertisement
திருச்சி : திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி முதல்வர் ராஜரத்தினம் மீது, ப்ளாரன்ஸ் மேரியை கட்டாய கருக்கலைப்புக்கு உட்படுத்தியதாக, மேலும் ஒரு வழக்கு பதிவு செய்வது குறித்து, விசாரணை நடக்கிறது. திருச்சி முதல்வர் ராஜரத்தினம் மீது, கன்னியாஸ்திரி ப்ளாரன்ஸ் மேரி (28), தன்னை கற்பழித்து, கொலைமிரட்டல் விடுத்ததாக, திருச்சி கோட்டை மகளிர் போலீசில் புகார் அளித்தார். இதன்படி,

திருச்சி : திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி முதல்வர் ராஜரத்தினம் மீது, ப்ளாரன்ஸ் மேரியை கட்டாய கருக்கலைப்புக்கு உட்படுத்தியதாக, மேலும் ஒரு வழக்கு பதிவு செய்வது குறித்து, விசாரணை நடக்கிறது. திருச்சி முதல்வர் ராஜரத்தினம் மீது, கன்னியாஸ்திரி ப்ளாரன்ஸ் மேரி (28), தன்னை கற்பழித்து, கொலைமிரட்டல் விடுத்ததாக, திருச்சி கோட்டை மகளிர் போலீசில் புகார் அளித்தார். இதன்படி, பாதிரியார் ராஜரத்தினம், அவருக்கு ஆதரவாக செயல்பட்ட மூன்று பாதிரியார்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, ராஜரத்தினத்தை முதல்வர் பதவியிலிருந்து கல்லூரி நிர்வாகம் நீக்கியது. கன்னியாஸ்திரி ப்ளாரன்ஸ் மேரிக்கு செய்த மருத்துவ பரிசோதனையில், அவர் கன்னித்தன்மை இழந்தவர் எனத் தெரிந்தது.  மதுரை ஐகோர்ட் கிளையில் முன்ஜாமீன் கேட்டு, ராஜரத்தினம் மனு தாக்கல் செய்தார்.


இருமுறை விசாரிக்கப்பட்ட இவ்வழக்கு, நவம்பர் 1ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. நேற்று முன்தினம் நடந்த வழக்கு விசாரணையில்,  கருக்கலைப்பு உள்ளிட்டவை குறித்து, ப்ளாரன்ஸ் மேரி விரிவாக எழுதிய கடிதம் ஒன்று, நீதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதன்படி,  தனியார் மருத்துவமனையில் கட்டாய கருக்கலைப்புக்கு ப்ளாரன்ஸ் மேரி உள்ளாகியுள்ளது தெரிந்தது. கட்டாய கருக்கலைப்புக்கு வலியுறுத்திய ராஜரத்தினம் மீது, மேலும் ஒரு பிரிவில், வழக்கு பதிவது குறித்து, கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


புதிய பாலியல் புகார்: பாதிரியார் ராஜரத்தினம் மீது கற்பழிப்பு புகார் பதிவானதுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தலித் கிறிஸ்துவ அமைப்பு சார்பில் போராட்டம் நடத்தப்படுகிறது. துண்டு பிரசுரங்களை வினியோகிக்கும் அவ்வமைப்பினர், "ராஜரத்தினத்துக்கு எதிராக செயல்படும் சில பாதிரியார்களின் செக்ஸ் லீலைகள் குறித்து விரைவில் ஆதாரத்துடன் அம்பலப்படுத்துவோம்' என, கூறி வருகின்றனர்.


Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
peter - சென்னை,இந்தியா
22-அக்-201020:04:31 IST Report Abuse
peter அப்படிபோடு அருவாளே.. ரெண்டு பிரிவு பாதிரிமார்களும் முட்டிகிட்டா உண்மை வெளியில் வந்து விடும்.. போலீஸ் ஏன் ராஜரத்தினம் போன்ற காமவேட்டைகளில் ஈடுபடும் பாதிரியை இன்னும் கைது செய்யவில்லை? இம்மாதிரி பாதிரிகளால் எங்கள் மதத்திற்கே தலை குனிவு..
Rate this:
Cancel
ரங்கராஜன் - லாஸ்ஏஞ்சில்ஸ்யு.எஸ்..ஏ.,இந்தியா
22-அக்-201012:12:41 IST Report Abuse
ரங்கராஜன் தப்பு செய்தால் தலித் என்றோ பாப்பான் என்றோ சட்டம் பார்க்கிறதா ?அவர் குற்றமே செய்யாதவர் என்றால் சரி ;அங்கே எதற்கு சாதியம் மதமும் வருகிறது ?இதில் இவர் மீது புகார் செய்த மற்ற பாதிரியார்களின் லீலைகள் வெளியிடப்படும் என்ற அச்சுறுத்தல் எல்லோரும் குற்றம் செய்பவர்களே என்ற நிலைக்கல்லவா எண்ண சொல்கிறது .கர்த்தர் உண்மை குற்ற வாளிக்கு தண்டனை அளிக்கட்டும்;;;பாவத்தின் சம்பளம் மரணம் ;;உண்மையா ?பார்ப்போம் ;;;;;
Rate this:
Cancel
V.Subbarao - Singapore,இந்தியா
22-அக்-201007:13:54 IST Report Abuse
V.Subbarao ஒரு பாதிரியார், எந்த பிரிவினராயினும், ஒரு பாதிரியாரைப்போலத்தான் இருக்க வேண்டும். அவர் தலித்தாக இருந்தால் எதைவேண்டுமானாலும் செய்து வரலாமா ? அரசு பதவி, பதவி உயர்வு இவைகளில்கூட விலக்கு/தகுதிகுறை தான் அனுமதிக்கப்படுகிறது. மத சார்பான செயல்களில், கடமைகளில் வித்யாசமா ! தவறு செய்ய அனுமதியா ! இவர்கள் விட்டால் பிறரை கொலை செய்யக்கூட தகுதி உண்டு என்பார்களோ ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X