பயங்கரவாதிகளுடன் காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் கடும் சண்டை

Added : அக் 21, 2010 | கருத்துகள் (2) | |
Advertisement
ஸ்ரீநகர் : காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடை யே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.  காஷ்மீரில், ஸ்ரீநகர் - பண்டிபூரா சாலையில் உள்ள மல்ரூ கிராமத்தில் ஒரு வீட்டில், மூன்று பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த பகுதியை பாதுகாப்புப் படையினரும், மாநில போலீசாரும் சுற்றி வளைத்துள்ளனர்.  பயங்கரவாதிகள்
பயங்கரவாதிகளுடன் காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் கடும் சண்டை

ஸ்ரீநகர் : காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடை யே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.  காஷ்மீரில், ஸ்ரீநகர் - பண்டிபூரா சாலையில் உள்ள மல்ரூ கிராமத்தில் ஒரு வீட்டில், மூன்று பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த பகுதியை பாதுகாப்புப் படையினரும், மாநில போலீசாரும் சுற்றி வளைத்துள்ளனர்.  பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தினர். பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். மக்கள் நெரிசல் மிகுந்த அந்த பகுதியில், பயங்கரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது. மூன்று ராணுவ ஹெலிகாப்டர்களில், பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கும் வீட்டை பாதுகாப்புப் படையினர் கண்காணிக்கின்றனர்.


பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், போட்டோ கிராபர் காயமடைந்தார். தொடர்ந்து, பயங்கரவாதிகளுக்கும், போலீசாருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. இதனால், அந்த பகுதியில் பெரும் பதட்டம் நிலவுகிறது. மேலும், காஷ்மீரில், பிரிவினைவாத இயக்கத் தலைவர் மிர்வாயிஸ் மவுல்வி ஒமர் பரூக், வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அனந்தநாக் மாவட்டத்தில், ஸ்ரீநகர் - ஜம்மு நெடுஞ்சாலையில், பிரிவினைவாதிகள் பேரணி மற்றும் முழு அடைப்பு போராட்டம் நடத்த   அழைப்பு விடுத்தனர். இதனால், நேற்று முன்தினம் மாலை முதல், காஷ்மீரில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


காஷ்மீர் பள்ளத்தாக்கில், 10 போலீஸ் ஸ்டேஷன்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். முக்கிய சாலைகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டுள்ளன. வெறிச்சோடியது: காஷ்மீரில் உள்ள உலகப் புகழ் பெற்ற சுற்றுலா தலமான தால் ஏரி, அங்கு நடந்து வரும் வன்முறை சம்பவங்களால் சுற்றுலா பயணிகள் வருகையின்றி வெறிச்சோடி கிடந்தது. ஏரியை சுத்தப்படுத்தும் பணிகள் தற்போது துவங்கியுள்ளன.


Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
saradha - bangalore,இந்தியா
22-அக்-201008:04:28 IST Report Abuse
saradha kashmir is part and parcel of india. both pakistan and kashmir have a long way to go in infrastructure,education,medical care,farming,textiles,tourism.must listen and start working. smt.pratibha patel'scouncil of officials help in this endevour.
Rate this:
Cancel
Nana - கோலாலும்பூர்,மலேஷியா
22-அக்-201006:32:16 IST Report Abuse
Nana காஷ்மீரை அமைதியாக இருக்க முடியாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு இருகிறார்கள். பாகிஸ்தானும், மிர்வேயஸ் போன்ற தலைவர்கள் இருக்கும் வரையில் இந்தியாவுக்கும், காஷ்மீர்வாசிகளுக்கும் தூக்கம் இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X