சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாதிரியாருக்கு மேலும் சில பெண்களுடன் தொடர்பு : ப்ளாரன்ஸ் மேரி புகார்

Added : அக் 22, 2010 | கருத்துகள் (11)
Share
Advertisement
பாதிரியாருக்கு மேலும் சில பெண்களுடன் தொடர்பு : ப்ளாரன்ஸ் மேரி புகார்

திருச்சி : ""பாதிரியார் ராஜரத்தினத்துக்கு இன்னும் சில பெண்களுடன் தொடர்பு உள்ளது,'' என்று திருச்சி போலீசில், கற்பழிப்பு புகார் கொடுத்துள்ள கன்னியாஸ்திரி ப்ளாரன்ஸ் மேரி கூறினார். திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி முதல்வர் பாதிரியார் ராஜரத்தினம் மீது, கற்பழிப்பு மற்றும் கொலை மிரட்டல் புகார் கூறியுள்ள கன்னியாஸ்திரி ப்ளாரன்ஸ் மேரி(31) நமது நிருபருக்கு அளித்த பேட்டி: கடந்த 2004ம் ஆண்டு நான் நெல்லையில் பணியாற்றிய போது, கன்னியாஸ்திரி கிளினஸ், பாதிரியார் ராஜரத்தினத்தை அறிமுகம் செய்து வைத்தார். அப்போது, எங்களுக்குள் எந்த தவறான தொடர்பும் கிடையாது. அதன் பின் நான் திருச்சி வந்து விட்டேன். அதே காலகட்டத்தில் தான் பாதிரியார் ராஜரத்தினமும் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் முதல்வராக திருச்சி வந்தார்.

ஏற்கனவே இருந்த அறிமுகத்தை வைத்து என்னை தொடர்பு கொண்டு, கல்லூரி வளாகத்தில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு அழைத்தார். நானும் எதார்த்தமாக போனேன். அங்கு, எனக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கெடுத்துவிட்டார். மேலும் என்னை நிர்வாண படமும் மொபைல் போனில் எடுத்து வைத்துக் கொண்டார்.

மயக்கம் தெளிந்த பின், ராஜரத்தினத்தை, "ஏன் இப்படி மோசடி செய்தாய்?' என்று கேட்டபோது, மொபைல் போனில் இருந்த என் நிர்வாண படத்தைக் காட்டி, "இந்த விஷயத்தை வெளியே சொன்னால், நிர்வாண படத்தை அனைவருக்கும் அனுப்பி விடுவேன்' என, மிரட்டினார்.

அதற்கு பயந்து, நான் அவர் என்னை கூப்பிடும் போதெல்லாம் கல்லூரி விருந்தினர் மாளிகைக்கு சென்று வந்தேன். இதனால், 2008ம் ஆண்டு கர்ப்பமடைந்தேன். அப்போதும் ராஜரத்தினம் மிரட்டியதால், கர்ப்பத்தை கே.எம்.சி., மருத்துவமனை பெண் டாக்டரிடம் மாத்திரை வாங்கி சாப்பிட்டு கலைத்தேன். மருத்துவமனைக்கு, கன்னியாஸ்திரி ஜான்சி என்பவரும், என்னுடைய அக்காவும் உடன் வந்தனர்.

கர்ப்பம் கலைத்த பிறகு ராஜரத்தினம் என்னை தொடர்பு கொண்டு, மீண்டும் என்னை விருந்தினர் மாளிகைக்கு அழைத்தார். "என்ன செய்தாலும் இனிமேல் நான் வரமாட்டேன்' என்று கூறிவிட்டேன். அந்த ஆத்திரத்தில், பழி வாங்கும் நோக்குடன் நான் சார்ந்திருந்த புனித அன்னாள் சபை தலைமை பொறுப்பில் இருந்த சேவியர் மரியதங்கம் என்பவருக்கு, என்னைப் பற்றிய விவரங்களை தெரிவித்துள்ளார்.

அதன்பேரில், அவர்கள் என்னை விசாரித்து, கட்டுப்பாட்டை மீறி நடந்து கொண்டதாகக் கூறி சபையிலிருந்து நீக்கிவிட்டனர். அதன் பின், பாதிரியாரிடம் நியாயம் கேட்டேன். அதற்கு அவர், "சிஸ்டர்கள் கிளினஸ், உஷா போல் உன்னையும் கவனித்துக் கொள்கிறேன்' என்று, சாதாரணமாக பதில் கூறினார். அப்போது தான், ராஜரத்தினத்துக்கு இன்னும் சில பெண்களுடன் தொடர்பு உள்ளது தெரிய வந்தது.

இதையடுத்தே அவர் மீது, இயேசு சபையின் தலைமையகத்தில் புகார் தெரிவித்தேன்; அங்கும் எனக்கு நியாயம் கிடைக்கவில்லை. அதன் பின் தான் கோட்டை போலீசில், பாதிரியார் மீது புகார் அளித்தேன். பாதிரியாருடன் நான் பழகியது எல்லாம் அவருடைய மிரட்டலுக்கு பயந்து தானே ஒழிய, வேறு எந்த காரணமும் கிடையாது. என்னை ஏமாற்றியது போல் வேறு எந்த பெண்ணும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதால் தான், பாதிரியார் மீது புகார் கொடுத்தேன். மற்றபடி அவரிடம் நானோ, என் குடும்பத்தாரோ பணம் ஏதும் கேட்கவில்லை. அது பாதிரியார் பரப்பி விடும் கட்டுக்கதை.

கன்னியாஸ்திரியாக இருந்ததால், சபைக்கு களங்கம் ஏற்பட்டு விடும் என்று, இவ்வளவு நாட்களாக புகார் கொடுக்காமல் இருந்தேன். என்னுடைய சபையில் நான்கு பக்கம் நான் எழுதிக் கொடுத்தது மன்னிப்பு கடிதம் தான்; புகார் கடிதம் அல்ல. இவ்வாறு ப்ளாரன்ஸ் மேரி கூறினார்.

பாதிரியாரை நீக்க வேண்டும் : பேட்டியின் போது ப்ளாரன்ஸ் மேரி, "பாதிரியாரிடம் நான் இயேசு சபையில் புகார் தெரிவிப்பேன்' என்று கூறியபோது, "எந்த சாமியாரும் யோக்கியம் கிடையாது; என்னை ஒன்றும் செய்ய முடியாது' என்று கூறினார். மேலும், தவறு செய்த என்னை, கன்னியாஸ்திரி சபையிலிருந்து நீக்கிவிட்டனர். அதேபோல், யோக்கியம் மாதிரி பேசிக் கொண்டு திரியும் பாதிரியாரையும் சபையிலிருந்து நீக்க, சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.


Advertisement


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கருத்து நய்யாண்டி - திருச்சிபஸ்டான்ட்,இந்தியா
23-அக்-201015:44:32 IST Report Abuse
கருத்து நய்யாண்டி நீ ஒரு கன்னியாஸ்திரி தொழில் செய்து கொண்டு இருக்கும் பெண்மணி. உனக்கு ஏன் இந்த சபலபுத்தி, அந்த சாமியாரு பயபுள்ள கூட சேர்ந்து கன்னியை இழந்து, இப்படி அவமானப்பட்டு பத்திரிக்கையில் வரும் அளவுக்கு ஆகிவிட்டாய். ஆனால் நீ சொல்வதை பார்த்தால் இன்னும் பல பெண்கள் கன்னியை இழந்திருக்கிறார்கள் என்று, கேட்கவே வெட்கமாக இருக்கிறது.
Rate this:
Cancel
கருத்து கே..பு.. - சங்குமங்குதெரு,இந்தியா
23-அக்-201015:29:16 IST Report Abuse
கருத்து கே..பு.. பாதிரியார் ராஜரத்தினத்துக்கு வணக்கம், உங்க பிட்டு படம் கிடைக்குமா?..
Rate this:
Cancel
குவாட்டர் கோவிந்து - திருவல்லிக்கேணிசென்னை,இந்தியா
23-அக்-201013:02:27 IST Report Abuse
குவாட்டர் கோவிந்து அம்மா ஒரே தடவைல எல்லா மேட்டரையும் சொல்ல மாட்டியா? எதோ உள் குத்து வெளி குத்து வச்சி அப்போ அப்போ நெனச்சி நெனச்சி பேசற மாதிரி இருக்கே? தொழில் ஏதும் நஷ்டமா? தொழில் போட்டியா? இல்ல நம்ம பாதி உன்ன பாதில கலட்டி உட பாத்து நீ ரொம்ப ட்ரை பன்றியோ?? ஏன் சொல்லு நீ ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மெசேஜ் கொடுக்குறது இப்டி தான்மா நினைக்க தோணுது. நீ என்ன பண்ற நல்ல பிள்ளையா ஒரே தரக்க எல்லாத்தையும் போட்டு உடச்சி எடுத்துரு என்ன? அப்ப தான் நாங்களும் இந்த மேட்டர்ல தெளிவா இருப்போம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X