ஈராக் - அமெரிக்கா போர் : தீயினால் கண்ணில் சுட்டு சித்ரவதை : போர் ஆவணம் லீக் ஆன பரபரப்பு

Updated : அக் 23, 2010 | Added : அக் 23, 2010 | கருத்துகள் (48)
Share
Advertisement
வாஷிங்டன்: கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் ஈராக் மீது அமெரிக்கா நடத்திய போர் தொடர்பான ரகசிய ஆவணங்கள் லீக் ஆன விவகாரம் அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. 2004 ம் ஆண்டு முதல் 2009 வரை ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்து அதிபர் சதாம் உசேன் வரை சிறையில் தள்ளப்பட்டு அவரும் தூக்கிலிடப்பட்டார். இந்த போருக்கு பின் ஈராக்கில் ஜனநாயக தேர்தல் நடத்தப்பட்டு அங்கு புதிய
WikiLeaks releases secret Iraq war documents, ஈராக் - அமெரிக்கா போர் : தீயினால் கண்னை சுட்டு சித்ரவதை : போர் ஆவணம் லீக் ஆன பரபர

வாஷிங்டன்: கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் ஈராக் மீது அமெரிக்கா நடத்திய போர் தொடர்பான ரகசிய ஆவணங்கள் லீக் ஆன விவகாரம் அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. 2004 ம் ஆண்டு முதல் 2009 வரை ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்து அதிபர் சதாம் உசேன் வரை சிறையில் தள்ளப்பட்டு அவரும் தூக்கிலிடப்பட்டார். இந்த போருக்கு பின் ஈராக்கில் ஜனநாயக தேர்தல் நடத்தப்பட்டு அங்கு புதிய ஆட்சி கொண்டு வரப்பட்டது.

 

இந்நிலையில் விக்கிலீக் இணையதளத்தில் ஈராக் போர் ஆவணங்கள் லீக் ஆகி இருக்கிறது. 4 லட்சம் ரகசியம் கொண்ட ஆவணங்களில் அமெரிக்காகவின் அத்துமீறல்கள், அட்டூழியங்கள், மற்றும் போர் வீரர்கள், பொதுமக்கள் துன்புறுத்திய சம்பவம் கொண்ட புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளது.

 

இதில் பல்வேறு புகைப்படங்கள் மிக கொடூரமானதாக இருக்கிறது. சரண் அடைய வந்தவர்களை சுட்டுக்கொல்வது, சிறையில் அடைத்து துன்புறத்துவது, கண்ணைக்கட்டி கொடுமைபடுத்துதல், சிகரெட்டால் கண்ணை சுடுதல், ரத்தகளறியுடன் கதற விடுவது போன்ற புகைப்பட காட்சிகள் இதில் உள்ளன. 

 

இந்த ஆவணங்கள் சட்டவிரோதமாக வெளியாக தந்திரமாக தயார் செய்யப்பட்டது என அமெரிக்க வெள்ளை மாளிகை வட்டாரம் தெரிவித்துள்ளது. இந்த போர் ஆவணம் லீக் ஆன விஷயம் அமெரிக்க போர் வரலாற்றிலேயே இதுவரை நடக்காதது என முன்னாள் போர்ப்படை தளபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். 

 

ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 32 பேர்  கொலை : இந்த ஆவணத்தின்படி ஈராக்கில் மொத்தம் ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 32 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பொதுமக்கள் 66 ஆயிரத்து 81 பேர். 23 ஆயிரத்து 984 பேர் கிளர்ச்சிக்காரர்கள், 15 ஆயிரத்து 195 பேர் ஈராக் போர்படையினர் ஆவர்.  


Advertisement
வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
YASIN - JEDDAH,இந்தியா
24-அக்-201011:42:21 IST Report Abuse
YASIN US ku ali kaalam vanthurichi
Rate this:
Cancel
அஷ்ரப் - துபாய்,ஐக்கிய அரபு நாடுகள்
24-அக்-201010:21:02 IST Report Abuse
அஷ்ரப் உண்மை ஒருநாள் வெளிவந்தே தீரும் அதற்க்கு இது நல்ல உதாரணம். நன்றி விக்கிலீக்.
Rate this:
Cancel
வேல் - சென்னை,இந்தியா
24-அக்-201009:17:26 IST Report Abuse
வேல் ஹி ஹி ஹி அமெரிக்க என்ன வேண்டுமானாலும் செய்யலாம் யார் கேட்பது இங்கு இருக்கும் வாசகர் கருத்தை பார்த்தேலே புரியும் ஒருநாள் இவர்களுக்கும் இது வரும் அன்று தெரியும் அமெரிக்காவை பற்றி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X