பொது செய்தி

தமிழ்நாடு

மஞ்சள் கிழங்கில் அழுகல் நோய் தாக்குதல் கட்டுப்படுத்த ஆலோசனை

Added : அக் 25, 2010
Share
Advertisement

நாமக்கல்: "மஞ்சள் கிழங்கில் அழுகல் நோய் தாக்குதல் பரவலாக காணப்படுகிறது. தடுப்பு முறைகளை கையாண்டால் நோயை கட்டுப்படுத்தலாம்' என, நாமக்கல் உழவர் பயிற்சி நிலைய வேளாண் துணை இயக்குனர் நடராஜன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: மஞ்சள் பயிரில் பல பூசான நோய்கள் தாக்கி பெரும் சேதத்தை விளைவிக்கின்றன. கிழங்கு அழுகல் நோய் மஞ்சள் சாகுபடி செய்யும் எல்லாப்பகுதியிலும் இழைப்பை ஏற்படுத்துகிறது.இந்நோய் தாக்குதலின் அறிகுறியாக, பாதிக்கப்பட்டு பயிரின் இலை ஓரங்கள் முதலில் சிறிது சிறிதாக காய்ந்து பின் முழுமையாக காய்ந்துவிடும். தண்டுப்பகுதியின் அடிப்பாகம் நீர் கோர்த்து மென்மையாக காணப்படும்.வேர்ப்பகுதி மிகவும் குறைந்து அதன் திசுக்கள் பாதிக்கப்பட்டிருக்கும். நோய் முதிர்ந்த நிலையில் கிழங்கில் நோய் தாக்கப்பட்டு அழுகிய திசுக்களாக மாறிவிடும். பயிர் ஆரஞ்சு நிறத்தில் உள்ள கிழங்கு பழுப்பு நிறமாக மாறுவதுடன் கிழங்கு உருவாவதும் பாதிக்கப்படுவதால் விளைச்சல் முழுவதுமாக குறைந்துவிடும். அதை கட்டுப்படுத்த, பயிர் சுழற்சி முறை கடைபிடிக்க வேண்டும். சிறந்த வடிகால் வசதியுள்ள நிலங்களையே தேர்வு செய்ய வேண்டும். நோய் தாக்குதல் இல்லாத விதை கிழங்குகளையே விதைப்புக்கு பயன்படுத்த வேண்டும். விதை கிழங்கை 0.3 சதவீதம் காப்பர் ஆக்ஸிகுளோரைடு கரைசலில் விதை நேர்த்தி செய்து நிழலில் உலர்த்திய பின் விதைக்க வேண்டும். வயலில் கிழங்கு அழுகல் நோய்க்கான ஆரம்ப அறிகுறிகளை பார்த்துடன் மென்கோ செப் 0.5 சதவீதம் அல்லது காப்பர் ஆக்ஸிகுளோரைடு 0.25 சதம் கரைசலை வேர்ப்பகுதியில் ஊற்ற வேண்டும். நோய் தாக்கிய பயிருக்கு அருகில் உள்ள ஆரோக்கியமான பயிரின் வேர்ப்பகுதியிலும் பூசானக்கொல்லி கரைசலை ஊற்ற வேண்டும். விதைப்புக்கு முன் வேப்பம் புண்ணாக்கு 80 கிலோ என்ற அளவு 4 டன் தொழு உரத்துடன் சேர்த்து வயலில் இடவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X