சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருச்சி கல்லூரி முதல்வர் கன்னியாஸ்திரியின் கற்பழிப்பு புகாரில் கைதா?

Added : அக் 26, 2010 | கருத்துகள் (5)
Advertisement
திருச்சி கல்லூரி முதல்வர் கன்னியாஸ்திரியின் கற்பழிப்பு புகாரில் கைதா?

திருச்சி : கன்னியாஸ்திரி கற்பழிப்பு புகாரில் சிக்கிய, திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி முதல்வரான பாதிரியார் ராஜரத்தினத்தை கைது செய்ய, போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி முதல்வர் பாதிரியார் ராஜரத்தினம், தன்னை கற்பழித்து, கட்டாய கருக்கலைப்பு செய்ததாக கன்னியாஸ்திரி ப்ளாரன்ஸ் மேரி, கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். வழக்கு பதிந்த போலீசார், ப்ளாரன்ஸ் மேரிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தியதுடன், கருக்கலைப்பு செய்ததாக கூறப்படும் புத்தூர் கே.எம்.சி., மருத்துவமனையிலும் விசாரணை நடத்தினர். இதற்கிடையே, ஐகோர்ட் மதுரை கிளையில், முன்ஜாமீன் கேட்டு ராஜரத்தினம், மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை விசாரித்த நீதிமன்றம், வழக்கு விசாரணையை, வரும் நவ., 1க்கு ஒத்தி வைத்தது. பாதிரியாரை கைது செய்ய வலியுறுத்தி, ம.க.இ.க., மாதர் சங்கம் போன்ற அமைப்புகள் முழு முனைப்பு காட்டி வருகின்றன. அதனால், போலீசார் அவரை கைது செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அல்லது கொடைக்கானல் எஸ்டேட்டில் பாதிரியார் தலைமறைவாக இருப்பதாகவும், சென்னையில் முகாமிட்டுள்ள அவரது தீவிர ஆதரவாளரைப் பிடித்து விசாரிக்க, திருச்சி போலீசார் சென்னை சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


பாதிரியார் ஆதரவாளர் தரப்பில் கூறப்படுவதாவது: ஐகோர்ட் மதுரை கிளையில், பாதிரியார் ராஜரத்தினம் முன்ஜாமீன் மனு விசாரணை தள்ளி வைக்கப்பட்டவுடன், உடனடியாக இடைக்கால ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை பரிசீலித்த நீதிபதி, "உடனே கைது செய்யப் போகிறீர்களா?' என, அரசுத் தரப்பு வக்கீலிடம் கேட்டார். அதற்கு அவர், "தற்போது அதுபோன்ற எண்ணம் இல்லை' என்று கூறினார். எனவே, இடைக்கால ஜாமீன் மனு வாபஸ் பெறப்பட்டது. பாதிரியார் சட்டரீதியாக வழக்கு எதிர்கொண்டு வரும் வேளையில், "பாதிரியார் கைது' என்று தேவையில்லாத வதந்தியை திட்டமிட்டு பரப்பி வருகின்றனர். இவ்வாறு ஆதரவாளர் தரப்பில் கூறப்படுகிறது.


Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கட்ஸ் - சென்னை,இந்தியா
27-அக்-201019:48:28 IST Report Abuse
கட்ஸ் இவனுகளுக்கு இதுவே வேலையா போச்சு. நீ எல்லாம் எதுக்கு பாதிரியாரா இருக்கே? ஒரு காலத்துல சர்ச் புனிதமா இருந்திச்சி... இப்போ எல்லாம் எல்லாரும் ஒரே குட்டையில ஊறின மட்டைகள் தான்.
Rate this:
Share this comment
Cancel
ரிக்கி - குவைத்,இந்தியா
27-அக்-201010:24:45 IST Report Abuse
ரிக்கி ஒரே ஒரு வித்தியாசம் தான். அங்கே கேமரா, அது இங்கே இல்லை.
Rate this:
Share this comment
Cancel
romancatholic - nagercoil,இந்தியா
27-அக்-201007:25:50 IST Report Abuse
romancatholic இவரை arrest பண்ணி விசாரித்தால் தான் உண்மைகள் வெளி வரும். இது போல் தவறு செய்து கொண்டு இருக்கும் மற்ற பாதிரியார்கள் பற்றி இவர் சொல்வார். இதற்க்கு பயந்து தான் மற்ற சில பாதிரியார்கள் இவருக்கு அடைக்கலம் கொடுக்கின்றனர். எங்கள் ரோமன் காதொலிக்-யில் சில பாதிரியார்கள் இருந்தாலும் போதும், நல்லவர்களாக.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X