பொது செய்தி

இந்தியா

1.73 கோடி ரூபாய் வரி பாக்கி செலுத்த கிலானிக்கு நோட்டீஸ்

Added : அக் 28, 2010 | கருத்துகள் (3)
Advertisement
1.73 கோடி ரூபாய் வரி பாக்கி செலுத்த கிலானிக்கு நோட்டீஸ்

புதுடில்லி : "ஜம்மு - காஷ்மீரில் உள்ள பிரிவினைவாதத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ., வுமான சயித் அலி ஷா கிலானி, வருமான வரி பாக்கித் தொகை 1.73 கோடி ரூபாயை டிசம்பர் 31க்குள் செலுத்த வேண்டும்' என, வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஜம்மு - காஷ்மீர் பிரிவினைவாத தலைவரான கிலானி மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர், 2002ல் சோதனை நடத்தி, கணக்கில் வராத பணம் 10.2 லட்சம் மற்றும் 10,000 அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் 5 லட்ச ரூபாய் ) கைப்பற்றினர். விலை உயர்ந்த தங்க நகைகள் மற்றும் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட வைர கைகடிகாரம் போன்றவற்றை வாங்கியதற்கான ஆவணங்களையும் கண்டுபிடித்தனர்.

கிலானியிடம் விசாரணை நடத்திய வருமான வரித்துறை அதிகாரிகள், அவரது வருமான விவரங்கள் குறித்த விவரங்களை கேள்வி-பதில் போல தயாரித்து, அதனை பூர்த்தி செய்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டனர். இருப்பினும், கிலானி உரிய பதில் அளிக்காததால், வருமான வரியாக 1.73 கோடி ரூபாயை செலுத்தும்படி நோட்டீஸ் அனுப்பினர்.

இதை எதிர்த்து, வருமான வரி ஆணையரிடம் கிலானி தாக்கல் செய்த அப்பீல் மனுவில் கூறியிருப்பதாவது:  நான் காஷ்மீரில் எம்.எல்.ஏ.,வாக பணியாற்றி ஓய்வு பெற்ற வகையில், ஓய்வூதியத் தொகை 7,100 ரூபாய் மற்றும் விவசாயம் செய்து வருவதால் அதிலிருந்து 10 ஆயிரம் என, வருடத்திற்கு 17,100 மட்டுமே கிடைக்கிறது. வேறு எந்த வகையிலும் எனக்கு வருமானம் வருவதில்லை. நான் செலுத்த வேண்டிய வருமான வரி நிலுவைத் தொகை 1.73 கோடி ரூபாயை ரத்து செய்து உத்தரவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கிலானி அப்பீல் செய்திருந்தார்.

கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்து வந்த இந்த விசாரணையில், கிலானியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. வருமான வரி தொகை 1.73 கோடி ரூபாயை டிசம்பர் 31ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என, கிலானிக்கு உத்தரவிடப்பட்டது.

வருமான வரித்துறை தயாரித்த அறிக்கையின் படி, கிலானியின் மாத வருமானம் 1 லட்சத்திலிருந்து 1.50 லட்ச ரூபாய் வரை கிடைக்கிறது. அவரது வீட்டில் 15 வேலைக்காரர்கள் இருக்கின்றனர். சமையல் செலவாக மட்டும் மாதம் ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாய் செலவழிப்பதாக கிலானியின் மனைவியே ஒப்புக் கொண்டிருக்கிறார்.

இது குறித்து கிலானியிடம் கேட்டபோது, "தனக்கு எந்தவிதமான நோட்டீசும் அனுப்பப்படவில்லை' என தெரிவித்தார்.வருமான வரித்துறை ஆணையரின் உத்தரவை எதிர்த்து, அத்துறையின் தீர்ப்பாயத்துக்கு செல்லவும் கிலானி திட்டமிட்டுள்ளார்.


Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ் நேசன் - ரியாத்,சவுதி அரேபியா
28-அக்-201013:20:54 IST Report Abuse
தமிழ் நேசன் இது அவர்மேல் சுமத்தப்படும் வீண்பழி. அவருக்கு கஷ்மீரில் இருக்கும் மரியாதையை குலைக்க இந்திய உளவுத்துறை செய்யும் சதி
Rate this:
Share this comment
Cancel
தமிழன் - சேலம்,இந்தியா
28-அக்-201012:36:25 IST Report Abuse
தமிழன் ப்பூ இவரும் மக்களை ஏமாத்தற சாதாரண அரசியல் வியாதிதானா? இந்த ஆளு பேச்சை எதுக்கு காஸ்மீர் மக்கள் கேட்கிறார்கள் என்று தெரியவில்லை. நிச்சயமாக பாகிஸ்தானிடம் இருந்து பொருக்கி தின்பவர் என்பது புரிகிறது. கஷ்மீர் மக்கள் ராணுவ சட்டத்தை மதிய அரசு விலக்கிகொண்டவுடன் இந்த ஆளையும் ஒதுக்கி வைக்க வேண்டும்!
Rate this:
Share this comment
Cancel
ராஜ் - சென்னை,இந்தியா
28-அக்-201010:20:07 IST Report Abuse
ராஜ் இவனுங்கலாலா புடிச்சி உள்ள போட்டா பெரிய கலவரம் வருமோன்னு அரசு பயபடுது போல, இதே போல எல்லா மக்களுக்கும் 8 ஆண்டு பொறுமை காக்குமா! நான் எனது வீடு கட்ட எடுத்த 25000 ரூபாய்க்கு மாதம் 500 கட்டுகிறேன், மருத்துவமனையில் படுத்துவிட்ட 2 மாதத்தில் இந்தியன் வங்கியிலிருந்து 5 ,6 முறை வந்து சென்றுவிட்டான். அனால் இவர்கலேல்ல்லாம் 8 ஆண்டுக்கு பிறகும் அப்பில் பண்ணுவார்கள், பிறகு கெடு கொடுக்கப்படும், அதற்குள் அவன் இறந்தே போவான். போங்கடா உங்க சட்டமும்..... நீங்களும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X