நிதிஷ் ஒரு சந்தர்ப்பவாதி: சோனியா ஆவேசம்

Updated : அக் 30, 2010 | Added : அக் 28, 2010 | கருத்துகள் (17)
Advertisement

பகல்பூர் : "பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் அரசு, அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்து விட்டது. நிதிஷ்குமார் ஒரு சந்தர்ப்பவாதி' என, காங்கிரஸ் தலைவர் சோனியா ஆவேசமாக பேசினார்.

பீகார் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக, காங்., தலைவர் சோனியா நேற்று பாட்னா வந்தார். இதன் பின், பகல்பூரில் நடந்த பிரசார கூட்டத்தில் அவர் பேசியதாவது: பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ஒரு சந்தர்ப்பவாதி. தன்னை மதச்சார்பற்றவர் என அடையாளப்படுத்தி கொள்கிறார். அதே நேரத்தில் தேர்தலுக்காக, மதச்சார்புடைய கட்சியுடன் கூட்டணி அமைத்து கொள்கிறார். பீகாரில் பெரியளவில் ஊழல் நடப்பதாக, தொடர்ந்து தகவல்கள் வருகின்றன. ஆனால், இதை ஒழிப்பதற்கு அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில், மின்சாரம், குடிநீர், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட மக்களுக்கு தேவையான எந்த திட்டமும் முறையாக செயல்படுத்தப்படவில்லை. நிதிஷ்குமார் அரசு, அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்து விட்டது. மாநிலத்தின் வளர்ச்சி திட்டங்களுக்காக மத்திய அரசு ஏராளமாக நிதி அளித்தது. ஆனால், மாநில அரசு அந்த நிதியை முறையாக பயன்படுத்தவில்லை. திட்டங்களின் தோல்விக்கு, மத்திய அரசு மீது நிதிஷ்குமார் பழி போடுகிறார். காங்கிரஸ் மட்டும் தான், உண்மையான மதச்சார்பற்ற அரசியல் கட்சி. எனவே, மக்கள் காங்கிரசுக்கு ஓட்டளிக்க வேண்டும். இவ்வாறு சோனியா பேசினார்.


Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
asds - madurai,இந்தியா
30-அக்-201020:41:45 IST Report Abuse
asds காலம் முழுவதும் மைனரிடிகளின் ஏஜெண்டாக இருப்பவர்களை விட, சந்தர்ப்பவாதிகள் எவ்வளவோ மேல்.
Rate this:
Share this comment
Cancel
கே.ஜீவிதன் - villupuram,இந்தியா
29-அக்-201020:59:59 IST Report Abuse
கே.ஜீவிதன் இந்தியாவிலேயே சிறப்பாக ஆட்சி செய்யப்படும் மாநிலங்கள் குஜராத்தும், பிஹாரும் தான். சட்ட ஒழுங்கு மற்றும் ஊழல் இல்லா நிர்வாகம் இதில் பிஹார் தமிழகத்தை பின்தள்ளி, முன்னுக்கு வந்துவிட்டதை வசதியாக மறந்துவிட்டீரா?
Rate this:
Share this comment
Cancel
A ரமேஷ் - Singapore,சிங்கப்பூர்
29-அக்-201018:57:19 IST Report Abuse
A ரமேஷ் வெட்கமா இல்ல, இத சொல்ல . நீங்க எல்லா துறையையும் கெடுத்து குடிசுவராக்கி வச்சுருக்கீங்க. கேக்குறவேன் கேனையனா இருந்தா , என்ன வேணாலும் பேசலாம் ! - Ramesh
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X