| மா விளைச்சல் அதிகரிக்க துணை இயக்குனர் யோசனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மா விளைச்சல் அதிகரிக்க துணை இயக்குனர் யோசனை

Updated : அக் 31, 2010 | Added : அக் 31, 2010

நாமக்கல்: "மா விளைச்சலை அதிகரிக்க மரங்களுக்கு காற்றோட்டமும், சூரிய வெளிச்சமும் அவசியம்' என, வேளாண் துணை இயக்குனர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளிட்ட அறிக்கை: சிறுநீரகம், இதயக் கோளாறுகள், வயிற்றுப் புண் ஆகியவற்றை குணமாக்குதோடு வாய் துர்நாற்றத்தையும் போக்கும் தன்மை மாம்பழத்திற்கு உண்டு. உடல் எரிச்சல், ஈரல் வலியை குறைக்கும். மா விளைச்சலை அதிகரிக்க மரங்களுக்கு காற்றோட்டமும், சூரிய வெளிச்சமும் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும். மரங்களில் உள்ள காய்ந்த கிளைகள், பழைய கிளைகள், உயிரற்ற பாகங்கள் ஆகியவற்றை ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கவாத்து செய்ய வேண்டும்.


வெட்டிய பாகத்தில் காப்பர் ஆக்ஸிகுளோரைடு தடவ வேண்டும். மழை காலம் துவங்கும் முன், கவாத்து செய்ய வேண்டும். புதுத் தளிர் வரும் எண்ணிக்கையை பொறுத்தே பூக்களின் எண்ணிக்கை அதிகமாகும். பருவமழை துவங்கியுடன் உரங்கள் வைக்க வேண்டும். டிசம்பர், ஜனவரி மாதங்களில் மரங்களை உஷ்ணப்படுத்த வேண்டும். மரம் உஷ்ணப்படுத்தப்படும்போது, பூக்கதிர்கள் உருவாகின்றன. இச்சமயத்தில் நனையும் கந்தகம் 2 கிராம் ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.


சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்த, எண்டோசல்பான் இரண்டு மி.லி.,யை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். பூக்கள் மொட்டாக மாறும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் சைட்டோசைம் டானிக் இரண்டு மில்லி ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். ஏப்ரல் மாதம் பூக்கள் சிறு பிஞ்சுகளாக மாறும் சமயம் செலின் இரண்டு கிராம் ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும். பூக்களில் தத்துப்பூச்சி இருந்தால், மனோகுரோட்டோபாஸ் இரண்டு மில்லி மற்றும் இரண்டு கிராம் கார்பென்டெசிம் கலந்து தெளித்து தத்துப்பூச்சி, பூஞ்சான நோயைக் கட்டுப்படுத்தலாம். கரையானை கட்டுப்படுத்த குளோர்பைரிபாஸ் ஒரு லிட்டருக்கு இரண்டு மில்லி தெளிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X