அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி நடக்க திராவிட கட்சிகள் தியாகம் செய்யணும்'

Updated : நவ 01, 2010 | Added : அக் 31, 2010 | கருத்துகள் (24)
Share
Advertisement

மண்ணச்சநல்லூர் : ""காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் ஆட்சி செய்ய, திராவிடக் கட்சிகள் தியாகம் செய்ய வேண்டும்,'' என இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பச்சமுத்து தெரிவித்துள்ளார்.


திருச்சி அருகே இருங்களூரில் பார்க்கவ குல முன்னேற்ற சங்க துவக்க விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. வரும் சட்டசபை தேர்தலில் பாரி நற்பணி மன்றம், இந்திய ஜனநாயக கட்சி, பார்க்கவ குல முன்னேற்ற சங்கம் மூன்றும் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து கலந்தாய்வு செய்யப்பட்டது.


அதன் பின், இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பச்சமுத்து, நிருபர்களிடம் கூறியதாவது: வரும் சட்டசபை தேர்தலில், இந்திய ஜனநாயக கட்சி தனித்துப் போட்டியிடுவதில் உறுதியாக உள்ளது. 10 தொகுதிக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளோம்; மீதமுள்ள தொகுதிக்கும் விரைவில் வேட்பாளர் அறிவிக்கப்படுவர்.ஒருவேளை கூட்டணி அமைந்தாலும், அறிவிக்கப்பட்டுள்ள 10 சட்டசபை தொகுதி வேட்பாளர் இடங்களை விட்டுத்தர மாட்டோம். அகில இந்திய அளவில் எங்கள் கட்சி உள்ளது. பீகார் சட்டசபை தேர்தலில், 20 தொகுதிகளில் எங்கள் கட்சி வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்தியாவில் எங்கு தேர்தல் நடந்தாலும் வேட்பாளர் நிறுத்தப்படுவர்.இந்தியாவை 100 குடும்பங்கள் தான் ஆட்சி செய்து வருகின்றன. மன்னராட்சி போல் நடைபெறுவதால் இந்தியாவில் ஜனநாயகம் இல்லை.


இலவச திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை தொழிலில் முதலீடு செய்து, இளைஞர்கள் உழைத்து முன்னேற வழி செய்ய வேண்டும். காங்கிரஸ் கட்சி தமிழகத்தை ஆள வேண்டும். திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகத்துக்கு ஆந்திரா, கர்நாடக மாநிலங்களுடன் தண்ணீர் பிரச்னை நிலவுகிறது.  மத்தியிலும், தமிழகத்திலும் காங்கிரஸ் ஆட்சி ஏற்பட்டால், மூன்று மாநிலங்களுக்கு இடையேயான தண்ணீர் பிரச்னை தீரும். எனவே, திராவிட கட்சிகள், காங்கிரஸ் ஆட்சி அமைய தியாக மனப்பான்மையுடன் விட்டுத்தர வேண்டும்.இவ்வாறு பச்சமுத்து பேசினார்.


ஐ.ஜே.கே., மாநில தலைவர் கோவை தம்பி, மாநில பொருளாளர் ராஜன், மாநில இளைஞரணி தலைவர் கிருஷ்ணமூர்த்தி, அமைப்பு செயலர் வெங்கடேசன், கொள்கை பரப்பு செயலர் நடராஜன், தலைமை நிலைய செயலர் ரங்கபாஷ்யம், மாவட்ட தலைவர் தங்கவேலு, பார்க்கவ குல முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் சத்தியநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 


Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
TAMILAN - DammamKSA,சவுதி அரேபியா
01-நவ-201011:04:21 IST Report Abuse
TAMILAN HE SAYS INDIA RULED BY 100 FAMILIES, BUT SUPPORTS CONGRESS. THIS IS CONGRESS WHICH SHOWED FAMILY RULING IN INDIA FOR THE FIRST TIME AND IT CONTINUES IN ALMOST ALL PARTIES. THEN HOW COME HE SUPPORTS CONGRESS, MAY BE HAS SOME DEALINGS . HE WANTS TO SECURE HIS COLLEGES AND PROPERTIES
Rate this:
Share this comment
Cancel
முன்னாள் மாணவன் - சென்னை,இந்தியா
01-நவ-201011:01:44 IST Report Abuse
முன்னாள் மாணவன் எந்த முகத்தோடு இந்த ஆள் தமிழ் நாடு அரசியலில் கலந்துகறார். நண்பர்களே இவர் நடத்தும் பொறியியல் கல்லூரிகள் அடிக்கும் கொள்ளை ஒரு பக்கம் இருக்கட்டும் , அவை அனைத்தும் தெலுங்கு சிறுபான்மை கல்லூரிகள். (தெலுங்கு மைனாரிட்டி காலேஜ் ). நான் அங்கு தான் பொறியியல் படித்தேன் , கல்லூரியில் சேர்ந்த சில நாட்களிலேயே வகுப்புக்கு அறிவிப்பு வரும் "தெலுங்கு மாணவர்களுக்கு கட்டணத்தில் சலுகை உண்டு. ஆகையால் ஆபீஸ் அறைக்கு வந்து தெலுங்கர்கள் என ஆவணங்கள் காட்டி சலுகையை பெற்றுகொள்ளவும் " . கல்லூரியில் கூட மொழி வெறி கொண்டு நமக்கு ஓர வஞ்சனை செய்த இந்த நல்ல மனசுக்காரர் இப்போ நம்ம மக்களுக்கு நல்லது செய்ய வந்துட்டாற்ப .. நேரா இவர CM ஆக்கிடுவொமா. இவரோட கல்லூரிகள்ள படிச்சவங்க மற்றும் பெற்றோரிடம் கேட்டு பாருங்க இந்த லட்சணத்தை. இவனுக்கெல்லாம் ஒரு ஓட்டு கூட போட கூடாது. இவங்களை எல்லாம் ஆரம்பத்திலயே அமுக்கணும் .
Rate this:
Share this comment
Cancel
குண்டப்பா - Croydon,யுனைடெட் கிங்டம்
01-நவ-201010:57:46 IST Report Abuse
குண்டப்பா நண்டு கொழுத்தா வலையில் தங்காது என்பது போல பச்சமுத்து கையில் ஆயிரம் கோடிகளில் பணம் புரள்கிறது. என்னதான் இந்த ஆள் சொல்லுகிறார். இந்த ஆளே இப்படி என்றால் இந்த ஆளுடைய கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் எப்படி இருப்பார்கள். ? திராவிடக் கட்ச்சிகள் தியாகம் செய்ய வேண்டுமாம். இவர் நோவாமல் நொங்கு திம்பாராம் . போய்யா வேற வேலை இருந்த போய் பாரும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X