பொது செய்தி

தமிழ்நாடு

நெற்பயிருக்கு நுண்ணூட்ட உரமிடல்

Added : நவ 01, 2010
Advertisement

கடையநல்லூர்: நெற்பயிருக்கு நுண்ணூட்ட உரமிடல் குறித்து கடையநல்லூர் வேளாண்மை உதவி இயக்குநர் (பொறுப்பு) முருகையா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் அறிக்கையில் கூறியிருப்பதாவது:கடையநல்லூர் வட்டாரத்தில் பிசான பருவத்தில் சுமார் 3 ஆயிரத்து 500 ஹெக்டேர் பரப்பளவில் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட உள்ளது. நெற்பயிருக்கு தழை, மணி, சாம்பல் சத்துக்கள் எவ்வாறு முக்கியமோ அதுபோல் நுண்ணூட்ட சத்து மிகவும் முக்கியமாகும். நெல் நுண்ணூட்ட உரம் ஒரு ஏக்கருக்கு 5 கிலோவுடன் சமபங்கு மணல் கலந்து நடவுக்கு முன்பு தனியாக இட்டு பின்பு நடவு செய்ய வேண்டும்.இவ்வாறு நுண்ணூட்ட உரமிட்டு நடவு செய்வதால் பயிருக்கு தேவையான இரும்புசத்து 0.3 சதம், மாங்கனீசு 0.3 சதம், துத்தநாகம் 3 சதம், தாமிரம் 0.4 சதம், போரான் 0.2 சதம், மக்னீசியம் 4 சதம் எளிதாக கிடைக்கிறது. பயிர் வளர்ச்சியின் போது நுண்ணூட்ட உரச்சத்தை எடுத்துக் கொள்வதால் நெற்பயிர் நல்ல முறையில் வளர்கிறது. அதிகமாக சிம்புகள் வெடித்து தூர் கட்டும். தண்டு வாளிப்பாக வெளிவரும். நெல்மணிகள் திரட்சியாகவும், பருமனாகவும் இருக்கும். நெல்மணிகள் பெருகி அதிக மகசூல் கிடைக்கிறது.நெல் நுண்ணூட்ட உரம் கடையநல்லூர் வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகள் அனைவரும் நுண்ணூட்ட உரம் வாங்கி அதிக மகசூல் பெற்று பயனடையுமாறு கடையநல்லூர் வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) முருகையா தெரிவித்துள்ளார்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X