பொது செய்தி

தமிழ்நாடு

கொலை, கடத்தல் சம்பவங்கள் எதிரொலி : விழிப்படைந்த மாணவர்கள்

Added : நவ 04, 2010 | கருத்துகள் (8)
Advertisement
கொலை, கடத்தல் சம்பவங்கள் எதிரொலி : விழிப்படைந்த மாணவர்கள்

சிவகங்கை : குழந்தைகள் கடத்தல், கொலை சம்பவத்தால் பெற்றோர், மாணவர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. கோவையை சேர்ந்த பள்ளி குழந்தைகள் முஸ்கின், ரித்திக்கை கடத்திச்சென்று கொலை செய்த கொடுமை தமிழகத்தை உலுக்கியுள்ளது. இச்சம்பவம் நடந்த சில நாட்களில், சென்னையில் மாணவர் கீர்த்திவாசன் (13) கடத்தப்பட்டு, நேற்று முன்தினம் மீட்கப்பட்டார். இச்சம்பவங்கள், மாணவர், பெற்றோர் மத்தியில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. உஷார்: இதுபோன்ற சம்பவம் நமக்கும் அரங்கேறி விடக்கூடாது என எச்சரிக்கை உணர்வு பெற்றோர், மாணவரை விழிக்க செய்துள்ளது. சிவகங்கையில் தனியார் வேன், ஆட்டோக்களில் பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர், டிரைவர், வாகனம் குறித்த விபரங்களை சேகரித்து வருமாறு, குழந்தைகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர். நேற்று காலை பள்ளிக்கு சென்ற மாணவர்கள், டிரைவரிடம் இந்த விபரங்கள் சேகரித்ததை காணமுடிந்தது. குறிப்பாக வாகன உரிமையாளர், டிரைவரின் மொபைல் போன் எண், அவர் இல்லாத பட்சத்தில் தொடர்பு கொள்ள வேண்டிய எண்ணை கேட்டு பெற்றனர். இதே போல அனைத்து மாணவர்களும் விழிப்புடன் இருந்தால், பிரச்னைகளை தவிர்க்கலாம். இந்நிலையில், மாணவர்கள் வரும் வாகனங்கள் குறித்த விபரங்களை சேகரிக்குமாறு, பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
டானியல் - Maldives,மாலத்தீவு
06-நவ-201013:45:52 IST Report Abuse
  டானியல் அப்போதும் குழந்தைகள் தான் இந்த விபரங்களை சேகரிக்க வேண்டுமா ?
Rate this:
Share this comment
Cancel
hariharan - chennai,இந்தியா
05-நவ-201016:09:46 IST Report Abuse
hariharan மாணவ மாணவிகளை ௬டிய மட்டும் பள்ளிகளில் உள்ள வேன்களில் அனுப்ப பெற்றோர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 100,200 ரூபா கம்மியாக இருப்பதற்காக private வேன்களில் அனுப்புவதை நிறுத்த வேண்டும் பசங்களின் பாதுகாப்பான பயணத்துக்கு பள்ளி நிர்வாகத்தால் நடத்தப்படும் வேன்களே சிறந்தது
Rate this:
Share this comment
Cancel
சாம் - கத்தார்,இந்தியா
05-நவ-201012:06:35 IST Report Abuse
சாம் இந்த நடவடிக்கையை வரவேற்கிறேன். இறுப்பினும் பெற்றோர்கள் இன்னும் விழிப்புணர்வோடு இருபது நல்லது. இந்த நாசவேலை பணத்திற்காக செய்பவர்கள் வேறு விதமாக கூட செயல்படுத்த தயங்க மாட்டார்கள். இந்த சம்பவத்திற்கு நூறு சதமானம் சினிமா மட்டுமே பொறுபேற்க வேண்டும். எப்படி ஆள் கடத்துவது கொலை செய்வது,பலாத்காரம் செய்வது என்று வெகு சுலபமாக கற்றுகொடுகிறது. நல்ல அறிவியல் சிரிப்பு வாழ்க்கைக்கு அவசியமான கருத்துகள் சினிமாவில் அழிந்து விட்டது. சினிமா தடை செய்யப்படவேண்டிய ஒன்று. சமுகநலம் கருதி சாம் கோவை/கத்தார்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X