அரசியல் செய்தி

தமிழ்நாடு

குழந்தைகள் கடத்தலை தடுக்க தனி சட்டம் ஐ.ஜே.கே., சார்பில் 9ம் தேதி உண்ணாவிரதம்

Added : நவ 04, 2010 | கருத்துகள் (10)
Advertisement
குழந்தைகள் கடத்தலை தடுக்க தனி சட்டம் ஐ.ஜே.கே., சார்பில் 9ம் தேதி உண்ணாவிரதம்

சென்னை : ""குழந்தைகள் கடத்தலை தடுக்க தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி, வரும் 9ம் தேதி தமிழகம் முழுவதும் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்,'' என, ஐ.ஜே.கே., நிறுவனத் தலைவர் பச்சமுத்து தெரிவித்துள்ளார்.

ஐ.ஜே.கே., நிறுவனத் தலைவர் பச்சமுத்து அளித்த பேட்டி: சமீப காலமாக சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பள்ளிக்கு அனுப்பப்படும் குழந்தைகள் கடத்தப்பட்டு, கற்பழித்து, பணம் பறிக்கும் நோக்கத்திற்காக கொலையும் செய்யும் வன் செயல்கள் தொடர்கின்றன. குறிப்பாக கோவையைச் சேர்ந்த முஸ்கன், ரித்திக் ஆகியோர் பணம் பறிக்கும் நோக்கத்திற்காக கடத்தப்பட்டு மூர்க்கத்தனமாக கற்பழித்து கொலை செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை வியாசர்பாடியில், 9ம் வகுப்பு மாணவி பொள்ளாச்சிக்கு கடத்தப்பட்டுள்ளான். முகப்பேரில் 9ம் வகுப்பு மாணவன் கீர்த்திவாசன் கடத்தப்பட்டுள்ளான். அரியலூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வின் தம்பி குழந்தைகள் உளுந்தூர்பேட்டை தி.மு.க.,பிரமுகரின் தங்கை மகள் கடத்தப்பட்டுள்ளனர். கடந்த ஐந்து மாதங்களில் சென்னையில் மட்டும் 29 கடத்தல் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. பாதுகாப்பு கேள்விக் குறியாகும் இது போன்ற சம்பவங்கள் தொடர்கதையாகவே உள்ளன. பெற்றோருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் பாதுகாப்பாற்ற இச்சம்பவங்கள் தடுக்கப்பட வேண்டும். குற்றவாளிகளை அரசியல் பின்புலம் கொண்டு விடுவிப்பது முழுமையாக தடுக்கப்பட வேண்டும்.

பள்ளிக் குழந்தைகள் கடத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், உள்துறை சட்டத்தை திருத்தி, சிறப்பு தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும். இதை வலியுறுத்தி, தமிழகத்தில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், வரும் 9ம் தேதி காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை ஐ.ஜே.கே., சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது. சென்னையில் நடைபெறும் போராட்டத்தை நான் துவக்கி வைக்கிறேன். இவ்வாறு பச்சமுத்து கூறினார்.


Advertisement


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தஞ்சை ஸ்ரீனி - அபிட்ஜான்,கோட்டி டி'ஐவைரி
05-நவ-201017:21:17 IST Report Abuse
தஞ்சை ஸ்ரீனி தலைவா... அப்படியே இதே கோரிக்கைகாக அமெரிக்க ஜனாதிபதிய பார்த்து ஒரு மனு கொடுத்துடுங்க. நீங்க இருக்றதா காட்டிக்கிறதுக்கு உண்ணாவிரதம் இருக்கீங்களே.. நீங்க என்ன சிரிப்பு தலைவரா..
Rate this:
Share this comment
Cancel
பாஸ்கரன் - மேச்சேரிசேலம்,இந்தியா
05-நவ-201014:47:05 IST Report Abuse
பாஸ்கரன் மற்ற அரசியல் கட்சிகளை போலவே அரம்பிச்சிடீங்களா உண்ணாவிரதம் என்று
Rate this:
Share this comment
Cancel
நாட்டாமை - tn,இந்தியா
05-நவ-201013:46:57 IST Report Abuse
நாட்டாமை கல்வியை போதியுங்கள் !கடத்தலை போதிக்காதிர்கள் SRM collage money make much
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X